உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் 13

இதனைக் கேட்டதும் குமுதவல்லியின் நெஞ்சம் ன்பத்தால் ஊடுருவப் பெற்றது. அவள் அவனிடத்துக் கொண்டிருக்கின்ற அன்புமிக்க நேசத்திற்குத் தன்னை அவன் தகுதியுடையவனாக்கிக் கொள்ளுகின்றானென உணர்ந்தாள்.

66

'ஆம், நாளை மாலையில் இவ்விடத்தே வணக்க வொடுக்கம் மிக்க ஒரு சடங்கு நடைபெறும். அப்போது தங்கள் மைத்துனனார் தூயகுருவினால் திருநீராட்டப்பட்டுத் தாம் பிறந்த சைவ சமயத்தைத் தழுவிக் கொள்வார். அவர்தம் பெற்றோர்களால் அவர்க்கு இடப்பட்டதும், தாங்கள் தெரிந்தவாறே தங்கள் குடும்பத்தில் எத்தனையோ எத்தனையோ தலைமுறையாகப் பேணப்பட்டு வந்ததும், தங்கள் பாட்ட னாரும் அவர்க்குப் பாட்டனாரும் பூண்டிருந்ததும் ஆன கோச்செங் கண்ணன் என்னும் பெயரையும் அப்பொழுது அவர் சூடிக் கொள்வார்!” என்று மனோகரர் தொடர்ந்துரைத்தார்.

99

“மாட்சிமை மிக்க மனோகரரோ, என் மைத்துனர் சைவ சமயத்தில் திரும்பவும் வந்து சேர்வதை யான் காணும் அந்நேரம் எனக்கு ஒரு நன்னேரமாய் இருக்கும். நாகநாட்டரசாட்சியை அவருக்கு நான் மன மகிழ்வோடு ஒப்புவித்து விடுகிறேன். ஆனாலும், அரிடமன்னன் ஆளுகைக்கு உள்ளடங்கி அரியணை மேல் முடிகவித்து வீற்றிருக்கும் ஓர் ஆவிவடிவைப் போல் யானிருக்குமாறு அந்நாட்டினரசியல் ஒரு நிழலின் தோற்றத்தை அடைந்திருக்கின்றதே!” என்று கூறினாள்.

“பெருமாட்டி, ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டின் முடிவுப்படி அல்லாமல்--உங்களுக்குள் முன்னமேயுள்ள உறவின் பொருத்த மானது இன்னும் நெருக்கமான மற்றக்கட்டுகளால் உறுதிப் படுத்தப் பட்டால் அல்லாமல் இங்ஙனம் நடத்தலாகாது.அழகிய குமுதவல்லி, இங்ஙனம் உள்ளதை உள்ளபடியாக யான் திறந்து பேசுதல் பற்றி, இம்முதியோனைத் தாங்கள் மன்னித்தல் வேண்டும். என்றாலும், நீண்ட காலமாய்க் காணாது போன தம் பேரன் உயிரோடிருத்தலைப் போற்றத்தக்க தங்கள் மாமனார் தெரிந்து கொண்ட பிறகு, யான் கடைசியாக அவரைச் சென்று கண்ட சிலவேளைகளிலெல்லாம் அவர் எனக்கு அடிக்கடி சொல்லிய விருப்பத்தினையே யான் தங்கட்குத் தெரியச் சொல்ல லாயினேன். எழில் மிக்க குமுதவல்லி, தங்கள் மைத்துனனார் சைவ சமயத்தைத் தழுவிக் கொண்டு, அவ்வாற்றால் அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/293&oldid=1581656" இலிருந்து மீள்விக்கப்பட்டது