உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

267

'அவர்தம் உயர்ந்த தன்மைகளுக்கு அறிகுறியான வற்றை யான் அறிந்து கொண்டேனாயினும், அவர் என்னைப் பற்றி ஒன்றுமே தெரியாதவராய் இருக்கின்றார்!” என்று கூறினாள்.

மனோகரர், தாம் தம் புதல்வியொடு பேசுவது போல் அவ்வளவு அன்பான அக்கரையைப் புலப்படுத்தும் வகையுடன் இன்னும் அமைதியான குரலிலேயே “இளவரசி, தங்கள் இளைய உறவினர் தங்களிடத்துள்ள பல நல்லியல்புகளையும் பாராட்டக்கூடிய அளவு தங்களைப் போதுமானபடி முன்னமே கண்டறிந்திருக்கின்றார்: அவர் தங்களைக் காதலிக்கின்றார்!” என்று மொழிந்தார்.

தூய

தனக்குப் பாட்டனாய் இருக்கத்தக்க முதியோன் ஒருவன் வாயினின்று வந்தமையானும், கூட இராத மற்றொருவனுக்குச் சார்பாகப் பேசப் பட்டமையானும் இவ்வறிவிப்பில் மன வருத்தத்தைத் தரத் தக்கதேனும், குமுதவல்லியின் உள்ளத்தை அல்லது அவள் மெல்லிய உணர்வை அதிரச் செய்வதேனும் ஏதும் இல்லை. மேலும், மேற்கணவாய் மலைக் காட்டுகளின் அடையேயுள்ள தமது இன்ப உறையுள் கண் வணங்கத்தக்க தன் பாட்டனாரான கோச்செங்கண் மன்னர் இறந்து போந்தறுவாயில் நிலை தடுமாறும் அவரது வாயிற் பிறந்த அவர்தங் கடைசியான விருப்பத்தையே, இப்போது நீலகிரிநகரின் கண் அவ்வறையிலே அம்மலைய வியாபாரியாகிய தக்கோன் மறுபடியுந் தெரிவிக்கலானான் என்று அவளுக்கு அது காணப்பட்டது. ஆகவே, தனக்கே உரிய தன் உறவினனால் தான் காதலிக்கப்பட்டாளென்னும் அவ்வறிவிப்புக் குமுதவல்லியின் அமைந்த நெஞ்சத்தில் மெல்லிய இனிமையுடன் சென்று ஆழ்ந்தது; நாணமானது தன் கன்னங்களிற் செந்நிறம் ஊட்ட அவள் மனோகரரை நோக்கி முணுமுணுப்போடு கூறுவாள்: எல்லாவற்றிலுந் தங்கள் சொற்படியே நடக்கக் கடவேன்-- ஏனெனில், என் பாட்டனார் தங்கள் வாயிலாகப் பேசுவது போல் எனக்குத் தோன்றுகின்றது!”

66

66

“தங்கள் உறவினர் திரும்பவுஞ் சைவ சமயத்திற்கு வந்தபின் அல்லாமல், அவர் ஒரு சைவக் கன்னிப் பெண்ணின் செவிகளில் தங் காதலைச் சொல்லற்பாலார் அல்லர். குமுதவல்லி, இப் போது அம்மாமறைப் பொருளைப் பற்றி ஒரு சொற் சொல்லி விடுகின்றேன். நாளை மாலையில் தங்கள் மைத்துனர் நீல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/296&oldid=1581682" இலிருந்து மீள்விக்கப்பட்டது