உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் - 13

லோசனன் என்னும் பௌத்தப் பெயரை மாற்றிச் சைவப் பெய ராகிய இளங்கோச்செங்கண்ணன் என்பதனைப் புனைந்து கொள்வர். யான் முன்னமே அவ்வளவுமிகுதியாகச் சொல்லி யிருப்பதும், அதனையறிந்து கொள்ளுதற்கு நீங்கள் இருவீரும் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டுமென நுங்கள் பாட்டனாரால் உருக்கத்தோடு எதிர்பார்க்கப்பட்டதுமான அம்மறைப் பொருள் அதன் பிறகு அவர்க்குத் தெரிவிக்கப் படலாம். ஆதலால், இருவீர்க்கும் ஒருங்கே அவ்வுண்மை முழுதும் எடுத்து விரித்து உரைக்கப்படும்; அதனையடுத்துச் சிறிதுங் காலந்தாழாது தாங்களும் தங்கள் மைத்துனரும் அம்மேற்கணவாய் மலை களுக்கு என்னோடுகூடப் பயணம் புறப்படுவீர்கள். தங்கள் இன்றைக்குக் கண்டு கொண்ட தங்கள் உறவினரோடு கலந்து பேசும்படி தங்களை இப்போது சிறிது நேரம் விட்டு விட்டுப் போகின்றேன்.” என்று அம்முதியோன் விளம்பினான்.

இவளுக்குத் தெரிந்திருக்கக் கூடுமென்று அம்முதியோ னால் இது வரையில் நினைக்கப்படாவிடினும், மேற்கணவாய் மலைகளின் இடையேயுள்ள இந்நிலவுலகத்து இன்ப உறை யுளைப் பற்றி இவள் தான் மிகுதியாக முன்னமே தெரிந்திருக்கும் வகைகளை விரித்துக்கூறி மனோகரரிடம் திகழ்கலையைக் குறித்துக் குமுதவல்லி பேச இருந்தாள். ஆனால், அவரோ தமது இருக்கையினின்றுஞ் சடுதியில் எழுந்து, பெற்றோர்க்குரிய உருக்கத்தோடும் அவள் கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்

க்

காண்டு, அவ்வறையினின்றும் வேறோர் உள் அறைக்குச் செல்லும் வாயில் வழியே விரைந்து சென்றார். எனினும், அவர் அவ்வாயிற் கதவை மூடவில்லை. நீலலோசனன் உடனே அவ்வாயிலிற் றோன்றினான். அவன் குமுதவல்லியின் எதிரே சென்று, “மைத்துனி, உங்களைப் போன்ற அத்துணை அழகிய ஓர் உறவினர் இருப்பதை யான் தெரியப் பெற்ற இந்நாள் ஒரு நன்னாளேயாகும்!” என மொழிந்தான்.

குமுதவல்லி நாணத்தால் முகஞ் சிவந்தாள்; ஏனென்றால், தன் மைத்துனன் தன்னை முன்னமே காதலித்திருக்கின்றான் என்னும் அறிவிப்பைப் போற்றத்தக்க மனோகரர் வாயினின்றுங் கேட்டதனால் உண்டான நினைவு இன்னும் அவன் உள்ளத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/297&oldid=1581690" இலிருந்து மீள்விக்கப்பட்டது