உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

269

நிலையாமல் இருந்தது. ஆனாலும், கன்னிமைக்குரிய இறுமாப்பு அவளுக்கு உடனே உதவியாய்வந்து நின்றது; அவளும் தக்கவாறு சிறிது மறுமொழிந்தாள்.

"நாம் பேசவேண்டுவது மிகுதியாய் உள்ளது -- குமுதவல்லி, நீங்களும் நானும்” என்று நீலலோசனன் சொல்லிக் கொண்டே அவளுந்தானுமாய் ஒரு சார்மனைக் கட்டிலின்மேல் அமர்ந்தார்கள். "யான் காண்பதற்கு மிக விரும்பும் அந்த நாகநாட்டைப்பற்றி, யான் பிறந்த அவ்வூரைப்பற்றிச் சொல்ல வேண்டுவன வெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லல்வேண்டும்: ஏனெனில், புத்த நாடுகளின் வடடத்திற்குள் அவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிறிதும் தெரிவதில்லை. ஓ! குமுதவல்லி, நேற்றுமாலையிற் புதுமையான அவ்விடத்தில் நீங்கள் வந்திருந்ததன் கருத்து யாதெனமுதலில் கேட்கின்றேன். அங்கே உங்களையான் பார்த்தபோது யான் அடைந்த வியப்பினைக் கருதிப்பாருங்கள்!”

66

யான்

அங்ஙனமே தங்களைப் பார்த்த போது யானடைந்த வியப்பினைக் கருதிப்பாருங்கள்!” என்று குமுதவல்லி விடை பகர்ந்து, நாம் ஒருவரோடொருவர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லிக் கொள்ளவேண்டும் நானே முதலில் துவங்கு கின்றேன். தற்செயலாய் யான் அந்த நங்கையை வழியிற் காணலானேன்.”

"கொள்ளைத் தலைவன் மனைவி மீனாம்பாள்,” என்று நீலலோசனன் இடையே கூறுவான்; “அவளேதான் என்று நேற்று நான் சொல்லக்கேட்டேன்; குமுதவல்லி, உங்கள் பார்வையினால், நீங்களும் அதனை அறியாதிருக்கவில்லை எனத் தெரிகின்றேன்.

66

""

ஆம். கொள்ளைத்தலைவன் மனைவி மீனாம்பாளே தான்.” என்று அவ்வரசி விடை கூறுவாள்; “ஒரு பாம்பு தன் நச்சுப்பற்களை அவள் சதையில் ஊன்றிக்கடித்தபோது யானுங் கூட இருந்தேன்; அவள் என் கைகளிலேதான் உயிர் துறந்தாள். ஓர் அறிவோள், மணப்பொருள்களும் மருந்துகளும் விற்றுத் திரிவோள் -- ஒருத்தியும் அப்போது கூட இருந்தாள்.”

“இறந்தோள் கிடந்த வீட்டிற்கு நேற்று மாலையில் என்னை அழைத்துச் சென்றவளும் அவளே தான்.” என்ற நீலலோசனன் கிளந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/298&oldid=1581698" இலிருந்து மீள்விக்கப்பட்டது