உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

66

மறைமலையம் - 13

'நாங்கள் கண்டபடியே, என்னை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றவளும் அவளே தான். இம்மாளிகைக்கு வந்து என்னைக்கண்டு தன் பின்னே வரும்படி மன்றாடிக்கேட்டாள். யானும் இசைந்தேன். மற்றைய தங்கட்குத் தெரியும்." என்று நாகநாட்டரசி கூறினாள்.

“என்னுடைய செய்தியும் இதனைப்போன்றதேயாம் ஆனால், ஒன்று; நேற்றுப் பிற்பகல் யான் இந்நகரத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் அவள் முதன்முதல் என்னைத் தெருவின்கண் எதிர்ப்பட்டாள்; எதோ ஒரு சாக்குச்சொல்லி என்னைத் தன்பின்னே வரும்படி வேண்டினாள். என்னை ஒரு குறிப்பான வழியே அழைத்துச்சென்று ஒரு வீட்டைச் சுட்டிக்காட்டி மாலை ஐந்து நாழிகைக்குமேல் ஏழரை நாழிகைக்குள் யான் அங்கேவரும்படி கடவுளறிய ஆணை யிட்டுக் கூறினாள். இஃது ஏதோஒரு குழ்ச்சியாயிருக்கின்றதென அஞ்சி இதனை மறுத்திருப்பேன்; ஆனால், அவள் கூறிய சில உறுதிமொழிகள் என்னை இணங்கச்செய்தன." என்று நீலலோசனன் கூறினான்.

66

அவ்விடத்திற்குச்செல்லும்

பொருட்டுத் தாங்கள்

அத்தெருவழியே செல்கையிற் றங்களைக் கண்டேன்,அஞ்சத்தக்க வாறாய்ப் பளீரென வீசிய அம்மின்னல் ஒளி தங்கள் நினைவி லிருக்கின்றதா? அஃது உங்கள் முகத்தை எனக்கு விளங்கக் காட்டியது. ஆனால் அவ்வறிவோள் உங்களுக்குச் சொல்லிய அவ் உறுதிமொழிகள்?” என்று குமுதவல்லி வினாவினாள்.

66

அவைகளை நீங்கள் அறியும்படி செய்தற்குக், குமுத வல்லி, யான் நீலகிரிக்கு வரும் வழியினிடையே உங்களிடம் வந்து சேரும்முன் எனக்கு நேர்ந்த இடரான நிகழ்ச்சிகளை விரித்துச் சொல்லல் வேண்டும்" என்று நீலலோசனன் மறுமொழி புகன்றான்.

அதன்பின் அவன் தான் கொள்ளைக்காரரோடு சண்டை செய்ததனையும், தெளிநீர்வேலியின்கண் தான் மீனாம்பாளைக் கண்டதனையும், கோபுரத்தினுள் அவள் இரண்டகமாகச் செய்த நடவடிக்கைகளையும் எடுத்து விரித்துரைத்தான்; ஆனாலும், மீனாம்பாளின் கிளரொளி வனப்பானது ஒருசிறிது நேரமேனுந் தனக்குக் கவர்ச்சியை விளைவித்ததென்று ஒருப்பட்டுக் கூறாமற் கருத்தாய் விட்டுவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/299&oldid=1581707" இலிருந்து மீள்விக்கப்பட்டது