உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • குமுதவல்லி நாகநாட்டரசி

271

“யான் உங்கள் பக்கத்தில் வழிப்பயணம் வரும்போது, குமுதவல்லி,” என்று நீலலோசனன் தொடர்ந்துரைப்பானாய்க்: 'கொள்ளைத் தலைவனான நல்லானது பெயர் பேச்சின் டையே வந்தது. தங்கட்கு அச்சத்தை ஊட்டுமென் றஞ்சி அதனைப்பற்றிய குறிப்புகளைப் பேசாது விட்டேன்: யானும், ஆண்மைமிக்க என் ஆட்களிருவரும் உங்கட்கு வழித் துணையாய்ச் செல்லல் வேண்டுமென்றும், ஏதேனும் இடர் நேருமாயின் யாங்கள் சாகும்வரையில் உங்களைப் பாதுகாத்தல் வேண்டுமென்றுந் தீர்மானஞ் செய்தேன்: ஆனாலும், உங்கட்குப் பெருந்திகிலை மிகுதியாய்த் தரவல்ல ஒரு சொல்லைக் கூறுவது பயனற்றதெனவும் நினைந்துணர்ந்தேன். அதுகிடக்க, யான் இடையே விட்டுவிட்ட நிகழ்ச்சியை முடித்துச் சொல்லி விடுகின்றேன். நேற்றுப் பிற்பகல் திகழ்கலை என்னும் அவ் அறிவோள் என்னைத் தெருவின்கட் கண்டுபிடித்து, மாலைப் பொழுதிற்றனிமையாயும் மறைவாயும் என்னை வரும் படி வேண்டின வீட்டண்டை முதன்முதல் அழைத்துச் சென்ற போது எனக்குச்சில உறுதிமொழிகள் புகன்றாளென உங்கட்குச் சொல்லியிருக்கின்றேன். அவ்வுறுதிமொழிகள் பின்வருமாறு சொல்லப்பட்டன: ‘தெளிநீர் வேலியில் நீங்கள் எவளைக் கண்டீர்களோ, கோபுரத்தின்கண் எவன் செய்த சூதுகளை நீங்கள் தப்பி வந்தீர்களோ அவள் இப்போது உயிரோடில்லை. ஒரு து பாம்பின் நஞ்சு அவள் நரம்புகளில் எங்கும் ஓடி அவளை உயிர்துறக்கச் செய்தது. யான் உங்களுக்கு இப்போது சுட்டிக்காட்டும் அதோ இருக்கிற வீட்டினுள்ளே உயிரற்ற அவ்வுடம்பு கிடக்கின்றது. தான் உயிரோடிருந்தபோது அவள் தங்களுக்குத் தீங்கிழைக்கப்பார்த்தமையால், அவளது பிணத்தண்டையில் இருந்து அவள் குற்றங்களைத் தாங்கள் மன்னித்துக் கூறினா லல்லாமல் அவளது ஆவி அமைதிபெறாது. இது மலையநாட்டார் தமக்குள் உள்ள ஓர் அறிவற்ற நம்பிக்கையாகத்தான் என் உள்ளத்திற் காணப்படுகின்றது; என்றாலும், அஃது உண்மையான ஒரு கோட்பாடாயு மிருக்கலாம். யாரதன் மெய்ம்மையைச் சொல்லக்கூடும்? தாங்கள்

எந்தவகையாலும் அருள் மிகுந்தவர்களாயிருத்தலால்,

மீனாம்பாள் மறுமையிற் பெறும் நன்மைக்கு அது பயன்படுவ தாயினும் இல்லை யாயினும் வருத்தமற்ற இச் சிறிய உதவிச்செய்கை புரிதலைத் தாங்கள் மறுக்கமாட்டீர்களென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/300&oldid=1581715" இலிருந்து மீள்விக்கப்பட்டது