உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம்

13

நம்புகின்றேன். பெருமான் நீலலோசன,யான் தங்கட்கு ஏதுந்தீங்கு செய்யேனென்று ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! ஏனென்றால், தாங்கள் இன்னார் என்பது எனக்குத் தெரியும்! தாங்கள், மேற்கரை நாட்டு மன்னரால் மருமகனாக உரிமைசெய்து காள்ளப்பட்டவர்கள் அல்லரோ! என்று அங்ஙனந் திகழ்கலை என்னை நோக்கிக் கூறினாள்; அதனால் நானுஞ் சென்றேன். குமுதவல்லி என்று அவன் பின்னுஞ் சொல்லுவான், "போற்றத்தக்க நம் நண்பர் மனோகரர் தாஞ் சொல்லிக்கொண்டு வந்த வரலாற்றிற் குறிப்பிட்ட அறிவோள் இந்தத்திகழ்கலையே யாவள் என்பதில் ஐயமில்லை; ஆனாலும், அவளை யான் அறிவேன் என்னும் அறிவிப்பை அப்போது இடையிற் கூறித் தடைசெய்ய விருப்பமின்றியிருந்தேன்; என்னையென்றால், அவர் அதனைப்பற்றி என்னைக் கேட்டிருப் பார், யானும் நேற்று மாலையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் விரித்துரைக்க வேண்டிய வளாயிருந்திருப்பேன்; யானோ அவைகளைப் புனிதமாகவும், அப்போதங்கே வந்திராத மற்றவர்களெல்லாரையும்பற்றிய அவை மறைவாக வைக்கப்பட வேண்டியன எனவும் எண்ணினேன்'

“தங்களுக்கு நேர்ந்த இடர்களைத் தாங்கள் சொல்லிக் காண்டு வந்த வரலாற்றிலிருந்து, தாங்கள் முறையிட்டுச் சொல்லவேண்டியனவும், நல்வினையற்ற மீனாம்பாளை மன்னித்தற்கு வாயிலாவனவும் ஆன பிழைகள் தங்கட்குச் செய்யப்பட்டன வென்பது நன்கு புலனாகின்றது. ஆனால், எனக்கு எதிரிடையாய் அவள் யாது தீங்குசெய்து கொண்டிருந் தாள் அல்லது செய்யச் சூழ்ந்துகொண்டிருந்தாள் என்பதுதான் என்னால் எண்ணிப்பார்க்கக் கூடவில்லை.” என்று நாகநாட்டரசி குமுதவல்லி கூறினாள்.

இந்த நேரத்தில் மனோகரர் அவ்வறைக்குத் திரும்பி வந்தார்; வந்தது, அவர்களுடைய கூட்டத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுதற்கும், அவர்களைப் பெருமைப் படுத்துதற்கும் அவர் திட்டம் பண்ணி வைத்த ஓர் உண்டாட்டுக்கு அவர்கள் வந்தருளும்படி தம் இளைய நண்பரான அவ் இருவரையும் வேண்டிக்கொள்ளுதற் பொருட்டே யாம்; ஆகவே, இனிப் பேச வேண்டிய ஒரு செய்திக்கு அவர்கள் பேசத்திரும்புந் தறுவாயில், விரும்பத்தக்க அம்மைத்துனர் இருவரின் பேச்சு திடீரென நின்றுபோயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/301&oldid=1581723" இலிருந்து மீள்விக்கப்பட்டது