உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

குமுதவல்லி நாகநாட்டரசி

273

அம்மலைய வியாபாரி மனைவியை இழந்தவர்: சிறிது காலத்திற்கு முன்றான் அவர்தம் மனைவியார் இறந்துபோனார்; ஆனாலும், அவர்கள் மணஞ்செய்து நீண்டகாலம் இன்புற்று ஒருங்குவாழ்ந்ததன் பயனாக அவரது குடும்ப திருவருளு தவியால் மிகப் பல்கியிருந்தது. அவர்தம் புதல்வரும் புதல்வியரு மெல்லாம் வளர்ந்து பெரியவராயிருந்தார்கள்; அவர்கட்குத் தக்கவாறு மணஞ் செய்யப்பட்டிருந்தது, மிகுதியான செல்வமுங் கொடுக்கப்பட்டிருந்தது, உண்மையிலே மனோகரர்தங் குடும்பம் நீண்டகாலமாகச் செல்வ வளத்தாற் புகழ்பெற்றிருந்தது; தமக்குள் திருமுருகப் போக்குவரவால் தம் வியாபார அலுவல் களை மிகுந்த ஊதியம் பெறுதற்கேற்றபடி நடத்திக் கொள்ளும் வகையாக இம்முதியோன்றன் புதல்வர்கள் கிழக்கே முதன்மை யான பல நகரங்களிலும் தம் இருப்பிடங்களை நிலைப்படுத்தி யிருந்தார்கள்.

மனோகருங், குமுதவல்லியும், நீலலோசனனும் அவ்வுண் டாட்டுக்கு வந்து அமர்ந்தார்கள்; அங்கே வேறொருவரும் வரவில்லை; ஏனெனில் முன்னமே சொல்லப்பட்ட எதுக்களால், தம் உயர்ந்தவிருந்தினரைத் தம்மால் இயன்றளவு விடமாகவே வைத்திருப்பதற்குத் தக்கோனான அவ்வியாபாரி ஆவலுற்றிருந்தார்.

குமதவல்லி நாகநாட்டரசி

மறை

முற்றும் –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/302&oldid=1581732" இலிருந்து மீள்விக்கப்பட்டது