உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

அடிகளாரின் நாடகத் திறன்

சய்வார்

பெரியர்

செயற்கு அரிய என்ற செம்மொழிக்கேற்ப மறைமலையடிகளார் தமிழுலகில் பற்பல புது நெறிகளை எதிர்கால மக்களுக்கு எடுத்துரைத்துச் சென்றுள்ளார். கட்டுரை உலகிலும், ஆராய்ச்சிக் கடலிலும் அவர் கண்டுணர்த்தாத பகுதிகள் மிகக் குறைவே. தாய்மொழிக்குச் செய்யவேண்டிய கடமையார்வமும், அக் கடமையைச் செவ்வனே ஆற்றுதற்குரிய அறிவின் ஆழமும் கொண்ட அடிகளார் கன்னித் தமிழின் படைப்பிலக்கியத் துறையில் புத்தொளி பாய்ச்சத் தலைப் பட்டார். அப் புதுநெறியில் பழைமையின் துணையும் மரபின் வளமும் கொண்டு ஆக்கப் படைப்பினைக் கலைத் துறைக்கு ஏற்ற வண்ணம் உருவாக்கினார்.

.

முன்னோர் நெறியைப் பின்பற்றும் சால்பு நெறியையே நாடகத் துறையில் அடிகளார் பின்பற்றினார். குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு ஆகிய இலக்கியங்களை ஆராய்ந்து உரை எழுதும்போது பழைய உரையாசிரியர்களிலிருந்து மாறு பட்டார்; தாமெடுத்த கொள்கையை நிலைநாட்டினார். போக்கிலிருந்து மாறிய போக்கினை நாடகத்துறையில் அடிகளார் விதைத்துள்ளார். நாடகத் தமிழின் 'விடி வெள்ளி'கள் முளைத்த காலத்தில் அவ் வொளியின் துணையால் தம் பணியை மூன்று நெறிகளில் செய்து முடித்தார். அவை யாவன :

அப்

1. துணைமை நெறி, 2. ஆய்வு நெறி, 3. தன்னாக்க நெறி என்பவையாம்.

துணைமை நெறி

மேனாட்டு உரைநடைக்கு வளமூட்டிய அடிசனாரின் ஆறு கட்டுரைகளைத் தமிழ் மக்கள் துய்க்கும் வண்ணம் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/304&oldid=1581749" இலிருந்து மீள்விக்கப்பட்டது