உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் - 13

பெயர்த்தார். அத்துடன் காளிதாசரின் சாகுந்தல நாடகத்தை தீந்தமிழில் வடித்துத் தந்தார். ஷேக்ஸ்பியருடன் காளிதாசனை ஒப்பிட இயலாது என அறிஞரொருவர் பேசினார். அதைக் கேட்ட அடிகளார் அதை ஏற்காமல் உண்மை காண முயன்றார். ஷேக்ஸ்பியருக்குத் தலைசிறந்த அறிஞர்களாம் உல்திசி, செர்விநசு, சுலேகல், சுவின்பர்ன், டௌடன், புரூக், பிராட்லே, சைமன், அட்சன், மோல்டன், நோர்கன், பிராண் டெசு போன்றவர்கள் எழுதிய விளக்கவுரைகளை எல்லாம் கற்றுணர்ந்து தாம் மொழிபெயர்த்த சாகுந்தலத்தின் பின்னி ணைப்பாகத் தொண்ணூறு பக்க அளவில் விளக்கவுரையை இணைத்துள்ளார். இப்பார்வை, இளம்பூரணம், நச்சினார்க் கினியம், பேராசிரியம் சென்ற போக்கிலே யிருந்து மாறு பட்டது. மேலும் நாடக இலக்கியத்தைப் புதிய முறையில் பார்க்கும் நெறியைத் தெளிவாக உணர்த்தியது.

ஆய்வு நெறி

விளக்கவுரையுடன் 'சாகுந்தல நாடக ஆராய்ச்சி' என்ற புத்தம் புதுத் திறனாய்வுச் செல்வத்தை அடிகளார் படைத்தார். தமிழிலக்கிய உலகில் இவ்வேடு ஈடு ணையற்றதாகும். 'சாகுந்தல நாடகம்' 1906இல் மொழிபெயர்க்கப் பெறினும் திறனாய்வு மலர 28 ஆண்டுக்காலம் இடைவெளி அமைந்த தென்றால் படைப்புக்குரிய பண்பு நலன்களை ஆராய அடிகளார் பட்டபாடு நன்கு புலனாகும்.

தன்னாக்க நெறி

பிறமொழி இலக்கியங்களை வழிகாட்டியாகக் கொண்டு வளர்ச்சி பெற நினைப்போரில் மொழி பெயர்த்த நிலையி லேயே தன்னிறைவு பெற்று விடுவோரும் இருப்பர். இலக்கியம் எப்படி அமையவேண்டும் என இலக்கண முறையில் விதிமுறைகளைக் கூறிப் படைப்பிலக்கியத் துறையில் கால் வைக்காமலேயே நின்றுவிடுவோரும் இருப்பர். ஆனால், அடிகளாரோ தமிழ் நாடகத் துறை பின்பற்றுதற்குரிய இலக்கியத்தைச் சாகுந்தல மாகத் தந்ததுடன் அமையாமல் நாடக ஆராய்ச்சி முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/305&oldid=1581757" இலிருந்து மீள்விக்கப்பட்டது