உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

காட்சிப் பெருக்கம்

மறைமலையம் – 13

இனி அடிகளாரின் நாடகத் திறனைக் காண்போம். அடிகளாரியற்றிய நாடகத்தை ஐந்து நிகழ்ச்சிகள் (ACTS) கொண்டதாக அமைத்துள்ளார். ஏழு நிகழ்ச்சிகள் கொண்ட அமைப்பை விட ஐந்து நிகழ்ச்சிகள் கொண்ட இவ்வமைப்பே நாடகக் கருவளர்ச்சிக்கு ஏற்றது என எண்ணிய எண்ணம் புலப்படுகிறது. நிகழ்ச்சிகளை மேலும் காட்சிகளாகப் பகுக்கும் போது நாடக ஆசிரியர் தாம் கைக் கொண்ட கதைக் கருவிக்கேற்ப எண்ணிக்கையைச் சுருக்கவோ பெருக்கவோ செய்வர். அதனால் கதைக் கருவின் வளர்ச்சி வடிவையும் அழுத்தத்தையும் அறிய இயலும். அம்பிகாபதி அமராவதியுள் காதல் விதை முளைத்துத் தளிர்த்துப் பல தடைகளுக்குத் தப்பி இறுதியாகக் காதல் மணம் கைகூடும் என்று ஆர்வத்தை மூட்டிப் பின் முற்றுப் பெறாமல் உதிர்ந்து விடுகிறது. இவ் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப

முறை

செயல்நிலை

நிகழ்ச்சி

காட்சி

விதை

1

2

~ 3

2

2

10

4

11

15

தளிர்

மலர்

கனி

5

வ்

என அமைத்துள்ளார். இவ் வேறுமுக எண்ணிக்கையில் காட்சிகளைப் பெருக்கிக் கொண்டே செல்லும்போது பின்னிகழ்ச்சிகளின் செறிவையும் பரப்பையும் உணரமுடிகிறது. காதற் சிக்கல்

காதல், சங்ககாலச் சமுதாயத்திலிருந்து இடைக்கால நிலையில் வேறுபட்டுச் சாதியாலும் ஆட்சியாலும் நசுக்கப் பட்டது. அவை யிரண்டும் ஒப்புயர்வற்ற புலவர் கம்பரையே இராமாயணத்தை அரசவையில் அரங்கேற்றவிடவில்லை. உவச்சர் குலம் அரசகுலத்தை விடத் தாழ்ந்தது என்ற கருத்து தலைமக்களின் காதலுக்கத் தடையாக அமைந்தது. அதனைக்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/307&oldid=1581774" இலிருந்து மீள்விக்கப்பட்டது