உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

279

‘கூத்த மனம்’ கொண்டவர்கள் கூடிய மட்டும் தன்னலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர் எனவும் தெரிகிறது. இச் சிக்கலின் அடிப்படையில் அம்பிகாபதி அமராவதி காதல் மாளிகை எழுந் தாலும் அடிகளாரின் கல்வி மணமே நாடகமெங்கும் வீC விளங்குவதால் சாதியின் கொடுமையோ அதன் தீய செயல் களோ மேலோட்டமாகவே விளங்குகின்றன.

உரையா டல்

படித்தற்குரிய நாடகத்தையே அடிகளார் படைத்துள்ளார். சாகுந்தல நாடகப் பதிப்புரையில், பதிப்புக்குப் பதிப்பு நடைச் செம்மை பெற்ற முறையை அடிகளார் கூட்டியுள்ளார். அடிகளாரின் முதிர்ந்த காலத்தில் முழு உருவத்தைப் பெறப் பலநாள் உருவெடுத்த இந்நாடகம் அடிகளாரின் முதிர்மொழிச் செம்மையினை நன்கு எடுத்துக் காட்டும் இடங்கள் பலப்பல. அதே காலத்து எளிய மக்களும் கோமாளியும், பேச்சு மொழியிலேயே உரையாடுகின்றனர். எனவே நாடகமாந்தர் தம் உரையாடல் அவர்தம் தகுதிக்கேற்ப அமைய வேண்டும் என்ற கொள்கையை அடிகளார் பின்பற்றியுள்ளார்.

பாடல்கள்

நாடகம் உரைநடையில் அமைந்திருப்பினும் மொத்தம் 90 பாடல்களுக்கு மேலாக நாடகத்தின் அகத்தே காண்கிறோம். திருக்குறள், சிலப்பதிகாரம், கோவையார், தனிப்பாடல்கள் போன்றவையும் இடையிடையே ‘பொன்போல்' ஒளி வீசுகின்றன. அடிகளாரின் சைவப் பற்றிற் கேற்ப முதலும் முடிவும் சிவன் வணக்கமாக அமைவதுடன் சிவ வாழ்த்தாக எண்ணற்ற பாடல்கள் விளங்குகின்றன. சிற்சில இடங்களில் உரையாடலும், மனோன்மணீய நெறியில், பாடல்களாக அமைந்துள்ளது.

காட்சி விளக்கம்

ங்கள்

உரையாடலில் இயற்கை விளக்கம் பெற்றுள்ள இ எண்ணற்றன. காலைக் கதரவனின் தோற்றம் ஒவ்வொரு மாந்தர்க்கும் ஒவ்வொரு வகையான எண்ணத்தைத் தோற்று விக்கும். கதிரவன் தோற்றம் சோழ மன்னனுக்கு அரக்கரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/308&oldid=1581782" இலிருந்து மீள்விக்கப்பட்டது