உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

L

மறைமலையம் – 13

மாயவலையினைக் கிழித்துக் கொண்டு புறப்படும் திருமாலின் திகிரிப் படையாகத் தெரிகிறது. பகையை வெல்ல நினைக்கும் அரசன் கண்ணுக்கு அப்படித் தெரிவது பொருத்தமே. அமைச்சர் கண்ணுக்குக் கதிரவனின் வட்ட வடிவம் தேனடை போலவும், கதிரொளி அடையிலிருந்து பாயும் தேன் போலவும், பறவைகள் காலையில் எழுந்து பறந்து செல்வது அத் தேன் ஒழுக்கினைப் பருகச் செல்வது போலவும் தெரிகிறது.. ஆட்சிப் பொறுப்பை ஆக்கப்பணிக்குப் பயன்படுத்தத் திட்டம் தீட்டும் அமைச்சர் கண்ணுக்கு அவ்வாறு தோன்றுவது ஏற்புடைத்து. அரசியின் கண்ணுக்கோ இயற்கை காட்சி மாறுபடுகிறது. கோபுரம் பூதம் போலவும், கோபுரம் கலசம் சிவனருட்பேரமிழ்தினைத் தாங்கி நிற்பது போலவும் தோன்றுகின்றன. தாய்மை உணர்வு இயற்கையில் இறைவனைக் காணுமாறு செய்கிறார் அடிகளார். ங்ஙனம் இயற்கைக் காட்சியை நாடக மாந்தர் தத்தம் இயல்புக்கேற்பக் காணுமாறு அடிகளார் படைத்துள்ளமை புலனாகிறது.

நாடக மாந்தர்

நாடக மாந்தர்களின் படைப்பில் தான் நாடகம் சீர்மை பெறும். நாடகத்தின் தலைமை மாந்தனாம் அம்பிகாபதி புகழ் பெற்ற புலவர்களாம் கம்பர், கூத்தருடன் வருவதைக் காட்டி அவனுடைய தகுதியைக் கூறாமல் கூறுகிறார் அடிகளார். இரண்டாம் நிகழ்ச்சி முதற்காட்சியிலேயே அம்பிகாபதியின் அறிவு நும்பம் வெளிப்பட்டுத் தன்னிகரற்று விளங்குகிற்று. 'புலவன்' என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போதும்., மெய்ப்பொருள் அறிவை உரைக்கும்போதும் காப்பிய மாந்தர் கூற்றையும் காப்பியப் புலவன் கூற்றையும் பிரித்துணர்த்தும் போதும் அவனுடைய நுண்மாண் நுழைபுலம் வெளிப்படுகிறது. இராமாயண எ அரங்கேற்ற அவையில் அம்பிகாபதியை அடிகளாரின் ஆசிரியர் சண்டமாருத சோமசுந்தர நாயகரையே காண்கிறோம். அமராவதிக்கு அவன் பாடம் கூறும்பாங்கில் பொதுநிலைக் கழக ஆசிரியரையே காண்கிறோம். தொடக்கத்தில் காதல் என்பது கணவனுக்கும் மனைவிக்கும் உள்ளம் பிரியா நேசம் என்பதை நூல் வாயிலாக அறிந்த ஏட்டுப் புலவனாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/309&oldid=1581791" இலிருந்து மீள்விக்கப்பட்டது