உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

287

பொருட்சுவை துளும்பவும், சைவக் கோட்பாட்டு நுட்பங்கள் மிளிரவும், அடிகளார் ஓர் அரிய உரை வகுத்து நாயகருக்கு !! அனுப்பினார். அதன் அருமை பெருமைகளை ஆராய்ந்து கண்டு அகமகிழ்ந்த நாயகர், 'இது சிவஞான முனிவரின் சீரிய உரையோடு ஒப்பது ‘என்று பாராட்டி, அதனைத் தம் செலவிலேயே அச்சிட்டு வெளிப்படுத்தினார்.

அம்மட்டோ! ஒரு கால் நாயகர் நாகைக்கு வந்தபோது, அடிகளார்பால் ‘நின்னை விரைவில் சென்னைக்கு வருவிப்போம். நீ அப்பக்கங்களில் இருந்தாற்றான் நலம் விளையும்' என அன்புரை கூறிச் சென்றார். தாம் கூறிச் சென்றவாறே, ஒரு சில நாட்களில் அடிகளாரைச் சென்னைக்கு வருவித்தார். தம்பாற் பயின்றவரும், ஆந்திரநாட்டிற் சித்தூரில் மாவட்ட நடுவராக இருந்தவரும் ஆகிய சே.எம். நல்லசாமிப் பிள்ளைக்கு, அடிகளாரை அறிமுகம் செய்துவைத்தார். அவர், தாம் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சித்தூரில் தொடங்க இருந்த ‘சித்தாந்த தீபிகை' என்னும் திங்கள் இதழை நடத்தும் அறிவுப் பணியில் அமர்த்தினார். சித்தாந்த தீபிகைத் தமிழ்ப் பதிப்பின் முதலைந்து இதழ்கள் வரையில் ஆசிரியராக இருந்து அடிகளார் அரிய பல கட்டுரைகள் வரைந்து வந்தார். ஆயினும், தமது குடும்பச் சூழ்நிலை கருதி, ஒரு சில திங்களுக்குப் பின்னர் அடிகளார் சித்தூரினின்று நாகைக்குத் திரும்ப நேர்ந்தது.

சென்னைக் கிறித்துவக் கல்லூரிக்கு ஒரு தமிழாசிரியர் வேண்டியிருந்தது. அச்செய்தி அறிந்த நாயகர், உடனே நாகையில் இருந்த அடிகளார்க்கு எழுதி, அவரைச் சென்னைக்கு வருமாறு பணித்தார். அப்பதவிக்கு அக்காலத்து இருந்த பெரும்புலவர்கள் பலர் போட்டியிட்டனர். ஆயினும், அவர்களுள் எல்லாம் மிக இளைஞராக இருந்தும், புலமையிற் சிறந்திருந்த அடிகளாரையே அக்கல்லூரியின் தலைவராக விளங்கியிருந்த வில்லியம் மில்லர் என்பவர், திறம் தெரிந்து தேர்ந்தெடுத்தார். அதுபோது அடிகளாருக்கு அகவை 22.

சென்னைக் கிறித்தவக் கல்லூரி, அந்நாளில் உயர் நடுவர் மன்றத்திற்கு அண்மையில் அதன் எதிரில் இருந்தது. அடிகளார் இலிங்கிச் செட்டித் தெரு முதலிய இடங்களிற் குடியிருந்து வந்தார். அந்நாளில், கல்லூரிகளில் தமிழுக்கும் தமிழாசிரியருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/316&oldid=1581849" இலிருந்து மீள்விக்கப்பட்டது