உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் – 13

திருவனந்தபுரத்திற்கு வருமாறு அழைத்தார். அந்நகரில் மார்த்தாண்டன் தம்பி என்பவர் நடத்திவந்த ஓர் ஆங்கிலப் பள்ளியில், தமிழாசிரியப் பணிபுரியும் வாய்ப்பினை அடிகளார்க்குப் பெற்றுத் தந்தார். தமது உடல் நலத்திற்கு ஏற்றதாகத் திருவனந்தபுரம் இல்லாமையினால் அடிகளார் இரண்டரைத் திங்களிலேயே அப்பணியை விடுக்க நேர்ந்தது.

L

.

நாகைக்

அடிகள் நாகையில் மாணவராக இருந்தபோது நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபைக்கும், காரோணர் கோயிலுக்கும், சென்னையிலிருந்து போந்து ‘சைவசித்தாந்த சண்ட மாருதம்' சீலத்திரு சோமசுந்தர நாயகர் என்னும் சைவப் பெருஞ்சான்றோர் ஆற்றிய அரும்பெரும் சொற் பொழிவுகளை அடிகளார் அவ்வப்போது கேட்டு மகிழ்ந்து பயன்பெற்று வந்தார். அதனால் அடிகளார்க்கு நாயகர் அவர்கள் பால் இயல்பாகவே பேரன்பும் பெரு மதிப்பும் ஏற்பட்டுப் பெருகி வந்தன. அந்நிலையில் தி.பி. 1928 (கி.பி. 1897) ஆம் ஆண்டில் நாகையில் நடைபெற்று வந்த ‘சற்சனர் பத்திரிகை' எனப் பெயரிய இதழ் ஒன்றில், ஒருவர் நாயகரின் சைவக் கோட்பாட்டுக் கருத்துக்களை மறுத்துப் பழித்து எழுதி வந்தார். அதனைக் கண் அடிகளார், அவரின் கொள்கையும் கூற்றும் சிறிதும் பொருத்த மற்றன என எடுத்துக் காட்டி ‘நீலலோசனி' என்னும் இதழில், 'முருகவேள்' என்ற புனை பெயரில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் எழுதினார். அதனைக்கண்டு வியந்து மகிழ்ந்த சோமசுந்தர நாயகர், தம்பால் மிக்க அன்பும் பற்றும் தோன்ற அக்கட்டுரைகளை எழுதியவர் யாவர், என வினவி யறிந்து, அடிகளாரை நேரிற்காண விழைந்தார். நாயகர் விழைந்தபடியே, அவர்கள் சில திங்கள் கழித்து நாகப்பட்டினத்திற்கு வந்தபோது, மதுரை நாயகம் பிள்ளை என்பவர், அடிகளாரை நாயகரிடம், அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அடிகளாரின் அறிவும் அழகும் அன்பும் பண்பும் கண்டு, நாயகர் பெரிதும் வியந்து மகிழ்ந்தார். ஒப்புயர்வற்ற ஆசிரியரும் மாணவரும் தம்முள் ஒருங்கு கூடி உயிர்போலப் பிரிவரிய தொடர்பு காண்டு, உள்ளம் களிதுளும்பினர். அடிகளார் பால், சீர்காழிச் சிற்றம் பல நாடிகள் இயற்றிய ‘துகளறு போதம்' என்னும் நூலை அளித்து, 'இதற்கு இனியதோர் உரைவரைக' எனப் பணித்தார். அவர் பணித்தபடியே சின்னாளில் அந்நூற்குத் சொற்சுவை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/315&oldid=1581841" இலிருந்து மீள்விக்கப்பட்டது