உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

31

வர்களாயிருக்கலாம் என்பது தங்களுக்குத் தோன்றவில்லையா?” என்று கேட்டனன்.

66

அதற்கு நீலலோசனன் நல்லானைக் குறிப்பிக்கின்ற னையோ? ஆம், அவனைப்பற்றிப் புதுப்புதுக் கதைகள் இந்நீலகிரி மலைச்சாரல் எல்லையைத் தாண்டிக்குடகிலிருக்கும் நம்முடைய சவிகளுக்கும் எட்டுகின்றன; உனக்கு உண்மையைச் சொல்லுகின்றேன், நான் அந்தக் கதைகளை ஒருசிறிதும் நம்புவதேயில்லை. நல்லான் என்னும் ஓர் ஆளே உண்டென்பது பெருங்கட்டு, அவன் ஒரு மனப்பேய் தான்” என்றனன்.

“எங்கள் தலைவ, நல்லான் என்பது கட்டாயிருக்கலாம், மெய்காப்பான சில துருப்புக்களுடன் நீங்கள் பத்திரமாய்ப் போகலாமென்று சிலர் கூறிய உறுதிமொழிக்கும் மாறாகச்

சன்ற இரண்டொரு நாழிகை யனுபவத்தினாலேயே இப்பக்கங்களில் ஆயுதபாணிகளான ஆறலைகள்வர் கூட்டம் உண்டென்பது நமக்குப் புலப்படவில்லையா?” என்று கேசரி வீரன் வினவினான்.

66

அதற்கு நீலலோசனன் இப்பிராயணஞ் செய்யும்படி என்னைத் தூண்டுதல் செய்தவோர் திருமுகங் கொண்டு வந்தவனான அந்த நீலகிரி நகரத்திளைஞன்றான் அங்ஙனம் உறுதியுரை மொழிந்தான். அவன் தான் மெய்யென்று நம்பினதையே கூறினான், அதுவேயுமன்றி நாம் போவதைப் பிறர் கவனியாத வண்ணமாய் அன்றோ பிராயணஞ் செய்யும்படி கற்பிக்கப்பட்டோம்--ஆ! அதோ எதிரே ஒரு குடிசை தோன்று கின்றது! அங்கே நாம் கடுகச் சென்று, அங்குள்ளோர்க்கு இங்கே நிகழ்ந்தனயாவும் தெரிவிப்போம். அவர்கள் நாம் வழியிலே போட்டு வந்த பிணங்களை அப்புறப் படுத்துவதற்கு வேண்டுவது ஏதேனுஞ்செய்வர்.

அப்படியே அம்மூவருங் குடிசையண்டைபோய்ச் சேர்ந்தனர்; அங்கிருந்த முதியோன் ஒருவனுக்கு நிகழ்ந்த வெல்லாஞ் சொல்லப் பட்டன. நல்லான் நடத்தும் ஆறலை தொழில்கள் இனிது நடைபெறுகின்ற மேற்கணவாய் மலைச்சாரலுக்கு நெடுந் தூரத்தேயுள்ள இடங்களில் இங்ஙனம் வழிமறிப்பு நேர்ந்ததைப் பற்றி அவன் மிகவும் வியப்படைந்தவன் போற் காணப்பட்டான். அதனோடு மூன்று பௌத்தரால் மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/60&oldid=1581315" இலிருந்து மீள்விக்கப்பட்டது