உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் 13

அதற்கு நீலலோசனன் “என் நம்பகமுள்ள கேசரிவீர நீ ஊகித்துச் சொல்லியது எனக்குப் பொருத்தமாகத் தோன்று கின்றது. அம் மறவர்கருத்து அதுவாயின். அவர் தோல்வி யடைந்ததும் நாம் வெற்றியடைந்ததும் அவர்களுடைய நல்ல ஏற்பாட்டினால் அல்லவா? அவர்கள் முதற்கணத்திலேயே நம்மைச் சுட்டுக் கொல்லாமற் கிட்ட வந்து எதிர்த்து நீலகிரி நாட்டார்க்குரிய வலிமையினையும் குடகுநாட்டார்க்குரிய வலிமையினையும் பரிசோதித்து அறிந்து கொண்டனர்” என்று கூறினான்.

அது கேட் இளையகாவலாளனான வியாக்கிரவீரன் "எங்கள் அரசுரிமைச் செல்வமே, முதன்முதற் பின்முதுகு காட்டியோடின பழிகாரர் இருவருந் தங்களால் ஒன்றுஞ்சாயாது என்று கண்டவுடனே துப்பாக்கியை எடுத்துச் சுட்டனர்; என் சாற்படியெல்லாம் வட்டமாய்த்திரிந்தும் முன்னோடியும் பின்னோடியும் நடக்கின்ற என் குதிரையின் இலாகவத்தி னாலன்றோ தங்களை விசுவசிக்கும் ஊழியக்கார னான அடியேன் தப்பிப் பிழைத்துத் தங்களோடு இப்போது பேசிக்

கொண்டிருக்கின்றேன்!” என்றனன்.

என்றதுங் கேசரி வீரன் “என் காதருகிலும் விசைக்காற்று விறுவிறுவென்று வீசுதல் போலக் குண்டுகள் சுழன்று போயின. அதுகிடக்க நாம் கௌதமசாக்கியரை வணங்குவேமாக! வெற்றி நம்பக்கமாயிற்று. வியாக்கிர வீரன் தோளில் வாள் வெட்டுப் பட்டது ஒன்று தவிர, நாம் வேறோர் இடையூறு மின்றி வந்து சேர்ந்தமை வியப்பேயாம்." என்று மொழிந்தான்.

இங்ஙனம் பேசிக்கொண்டே நீலலோசனனும் அவன் காவலாளரும் வழி பிடித்துப் போயினர்; அரசிளைஞனும் இப்போது தன் காவலாளருடன் சேர்ந்து போயினான்; மற்றொரு முறையும் வழிமறித்தல் நேரிடுவதாயின் அதற்குச் சித்தமாய் உபயோகித்தற்பொருட்டு மூவருந் துப்பாக்கியைக் கையில் ஏந்திய

வண்ணமாய்ச் சென்றனர்.

செல்லும்போது சிறிது நேரங்கழித்துக் கேசரிவீரன் “எங்கள் அரசே நம்மை வழிமறித்தவர்கள், சோழ நாட் டார்க்கும் மலைநாட்டார்க்கும் சிலகாலமாய் பெரியதோர் அச்சத்தினை யுண்டுபண்ணிவருங் கள்வர் தலைவனைச் சேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/59&oldid=1581314" இலிருந்து மீள்விக்கப்பட்டது