உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

29

சுடப்பட்டு விழுந்திறந்தான்; மற்றை யோன் பிழைத்தோடிப் போயினான். காவலாளர் இருவரையும் வளைத்துக்கொண்ட கள்வர் நால்வரில், இருவர் தலையிற் சுடப்பட்டு உயிர் ஒழிந்து நிலத்திற் கிடந்தனர். மற்றிருவரில், ஒருவன் கத்திவெட்டினால் வாளேந்தியதோள் அறுபட்டும், மற்றொருவன் கழுத்து முள்ளெலும்பு ஒடிந்தும் எதிர்நிற்க லாற்றாது முன்னே சொன்னவாறாய் ஓடிப்போயினர். ஆகையால் நீலலோசனன் காவலாளரும் தந் தலைவனைப் போலவே வெற்றிமறஞ்சிறந்து விளங்கினர். ஆயினும் இவர் களில் ஒருவனுக்கு மாத்திரம் இடது தோட்புறத்துச் சதையில் வாள் அழுந்து வெட்டுக்காயமிருந்தது; இதுபற்றி அவர் சிறிதும் மனந்தளர்தலின்றி தம்முடைய தலைவனுடன் கூடி மகிழ்ந்தனர்.

கொல்லப்பட்ட கள்வர் மூவருடைய குதிரைகளும் இவர்கள் கட்பார்வைக்கு அகப்படாமல் அவ்விடத்தை அகன்று ஓடிப்போய் விட்டன. நீலலோசனனும் அவன் காவலாளரும் வழி நடுவிற் கிடந்த அப்பிணங்களை அகற்றிக் கொடிமுந்திரிப் பந்தர் நிழற்கீழ் கிடத்தி விட்டுத் தாம் போம் வழியிற் செல்வ ராயினர். செல்லும் போது இங்ஙனம் வந்து வழிமறித்தவர்கள் வேறார் நோக்கமுமின்றிக் கொள்ளையிடுதலே குறிப்பாக வுடைய ஆறலைக் கள்வர் கூட்டத்திற் சேர்ந்தவர்கள் என்று எண்ணினர்.

அப்போது நீலலோசனன் அவரைப்பார்த்து அக்கொடிய வர்கள் குறுங்காட்டில் மறைந்திருந்தபடியே நம்மைச்சுடாமல் எதிரேறிவந்து போரிட்டது எனக்கு மிகவும் புதுமையாய் ருக்கின்றது. அப்படி அவர்கள் சுட்டிருந்தால் நாம் எல்லாம் உயிரிழந்திருப்போம். மலைநாட்டுக் கள்வர் குறிதவறாமற் சுடுவதில் மிகவும் வல்லவராயிற்றே என்று கூறினான்.

அதைக்கேட்டதும், அடர்ந்து பழுத்துப்போன தாடியும், மனவுறுதி, ஊக்கம், பொறை முதலிய உயர்குணங்கள் நன்கு விளங்குகின்ற முகமும், தடித்துத் திணிந்த உடம்பும் உடைய வனான மூத்தகாவலாளன் “எங்கள் அரசின் செல்வமே, நம்மிடத்துக் கொள்ளை கொள்வதுடன் நம்மைச் சிறையாகப் பிடித்துக் கொண்டுபோய்த் தம் மலை அரணில் வைத்திருந்து விடுதலை பெறும்பொருட்டுப் பெருந்தொகையான பொருளும் அடையலாம் என்கின்ற நோக்கத்தோடு அவர்கள் நம்மை எதிர்த்தவர்களாக எனக்குத் தோன்றுகின்றது” என்றனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/58&oldid=1581313" இலிருந்து மீள்விக்கப்பட்டது