உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் 13

தொற்றிக் கொண்டிருப்பர். இந்தச் சூழ்ச்சி யினையறியாத எதிரி தன் குதிரையினின்றும் பாய்ந்து இக்குதிரை மேல் ஏறுவா னாயினும்., அன்றி எதிரியோடிப் போயினான் என்று நினைந்து தன் குதிரையை விட்டுக் கீழ் இறங்குவானா யினும் உடனே அவன் மேற் புலிபோற் பாய்ந்து பற்றிக் கொள்ளுவர். இதே வகையாய் நீலலோசனனைத் தன் குதிரையினின்றும் இறக்கும் பொருட்டு இருளன் இவ்வாறு ஓர் உபாயஞ் செய்தான்.

ஓர் இமைகொட்டில் நீலலோசனன் தான் ஐயப்பட்டது உண்மையென்று கண்டு குதிரை சேணத்திநின்றும் உருவின தன்கைத் துப்பாக்கியை இருளன் மண்டைக்கு நேராய்க் குறிகாட்டித் தனக்குக் கீழ்ப்படியும்படி கேட்டனன். இதற் கிடையிற் போர்புரிந்து கொண்டிருப்போர்க்குப் பின்னேயிருந்து குண்டுகள் வந்து விழுந்தன; இச்சமயத்திற் கள்வர் இருவர் முன்னே காற்றினுங் கடுகி வந்து இருளனை நோக்கி “உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்றனர்.

மின்னல் தோன்றுவதுபோல இருளன் குதிரை அப்புறந் துள்ளிப்பாய்ந்து போயிற்று; அதே சமயத்தில் நீலலோசனன் துப்பாக்கியினின்று புறப்பட்ட குண்டுகள் முறிபட்டுப் பறந்தோடுங்கள்வன் காதோரமாய்க் கிறுகிறு வென்று சுழன்று போயின. பறந்தோடின இருளன் நூற்றைம்பது முழந்தூரம் போனவுடனே தன் குதிரையை நிறுத்தி இப்புறந் திருப்பி முதுகிற் றொங்கவிட்டிருந்த கைத்துப்பாக் கியினை அவிழ்க்கத் தாடங்கினான். நீலலோசனன் கூரிய கண்களுக்கு தெரிந்தவுடனே, மலைநாட்டுக்கள்வர் குறி பிழையாமற் சுடுவதில் வல்லவர்களென்பதனை உணர்ந்து, தான் அதற்கு இலக்காய் அகப்படாமல், தன் குதிரையை முடுக்கிக் குறுங்காட்டினுள்ளே புகுந்துப்போய்த் தப்பினான். இவன் இதற்குள் நுழைந்த பிற்கணத்தே துப்பாக்கிக் குண்டுகள் கிறுகிறுவென்று சுழன்று சென்றன. இருளன் தன் எதிரி தப்பிப்போய்விட்டதை அறிந்து குதிரையைத் திருப்பிக்கொண்டு விரைந்து போயினான்.

இது

இதற்கு முன்னமே நீலலோசனன் தன்பின்வந்த காவலாளர் எங்ஙனமாயினார் என்பதனை ஒரு நொடிப் பொழுதிலே அறிந்துகொண்டனன்; இப்போது அதனைச் செவ்வையாக அளந்தறிவதற்குச் சமயம் வாய்த்தது. கள்வர் அறுவரில் இருவர் அப்பௌத்த இளைஞனை மறித்தனர். இவ்விருவரில் ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/57&oldid=1581312" இலிருந்து மீள்விக்கப்பட்டது