உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

27

களாயினுஞ் சடுதியில் தழைகளானும் பழங்களானும் மறைக்கப் பட்ட திரையைக் கீறிக் கிழித்துப் புகுந்ததுபோல மேல் வந்து விழுந்து, இருவர் நீலலோசனனையும் மற்றை நால்வர் அவன்பின் வந்த மற்றிருவரையும் வளைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அக்கள்வர் எவ்வளவு சுருக்கெனப் புகுந்த னரோ அவ்வளவு விரைவில் அப்பௌத்தர் மூவர் வலதுகை யினும் வாள் உறை கழிக்கப்பட்டு மின்னின; அதே சமயத்திற் சேணத்திற் செருகியிருந்த கைத் துப்பாக்கியினை இடது கையால் ஒவ்வொரு வரும் உருவி யிழுத்தனர். ஆகவே அக்கள்வர் எதிர்பார்த்த வண்ணம் அவர்கள் காரியம் நிறைவேறுவது அரிதாய்க்காணப் பட்டது; இருளனும் மற்றொரு கள்வனும் நீலலோசனன் மேற் குதித்து விழவே, அவன் ஒருகையாற் சுழற்றி வீசிய வாள் ஒருவன் மேற் படும்பொழுது, அவன் மற்றைக் கையிற் பிடித்த துப்பாக்கி மற்றொருவனைச் சுட்டு கீழே வீழ்த்தியது. இருளனோ அவ்வாள்வீச்சுக்குத் தப்பிக்கொண்டு ஒரு கையில் வாளேந்தி மற்றொரு கையால் அவனைப் பிடிக்க முயன்றான். நீலலோசனன் தன் பகைவனைப்போலவே தன் குதிரையைத் திறம்பட நடத்துஞ் சாதுரியம் நன்கு வாய்ந்தவ னாதலால் குதிரையின் கடிவாளத்தைப் பின்னுக்கு பிடித்து இழுத்துத் தன் பகைவன் தன்னைக் காத்துக்கொள்ளுதற்கு இடஞ்செய்தான். இவ்வாறு சிலநேரம் இருவர்க்கும் போர் மூண்டு நடக்கையில், திடீரென்று இருளன் தன் குதிரை மேனின்றும் வழுவி மறைந்து போயினான்; அப்படி மறைகையில் நீலலோசனன் தான் அவன்மேல் எறிந்த படைவீச்சு அவனை கொல்லமாட்டாமையால் அவன் மறைந்து போனது ஏதோ ஓர் உபாயமாக இருக்கின்றதென உடனே தெரிந்து கொண்டான். தெரியவே அவன் தன் குதிரையினின்றும் பாய்ந்து பகைவனைப் பிடித்துக் கொள்ள முயலாமல் இச்சண்டையின் முடிபை யறியும்பொருட்டு ஒரு கணநேரம் வாளாவிருந்தனன்.

.

உண்மையாகவே இருளன் அவ்வாறு மறைந்துபோனது ஒரு தந்திரம். மலைநாட்டுக்கள்வர் போர்முகத்தில் இத்தகைய தந்திரங்கள் செய்து வெற்றியடைவதில் மிகவுந் திறமையு டையவர்களாய் இருந்தனர்; போர் நடந்துகொண்டிருக்கையில் சடுதியிலே குதிரை முதுகின் மேலிருந்து வழுவி அதன் வயிற்றின் கீழ்ப்புகுந்து கால் உதையும் வளையத்திற் கால்விரல் மாட்டி இரண்டு கைகளானும் பிடரியைப் பிடித்த வண்ணமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/56&oldid=1581311" இலிருந்து மீள்விக்கப்பட்டது