உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

  • மறைமலையம் 13

யினான்; அங்ஙனம் போகையில், பாதையின் இருபக்கங் களினுமுள்ள குறுங்காடு ஒன்று சேர்ந்து மேலே கவிந்திருக்கும் ஓர் இடத்தைத் தெரிந்துகொண்டு அங்கிருந்து நம்முடைய காரியத்தை நிறைவேற்ற விரும்பி, அதற்கு அருகாமையில் உள்ள ஓரிடத்திற் குதிரைகளை நடத்திக்கொண்டுபோய்ப் புல்மேய விடுத்து, ஒவ்வொருவரும் ஒரு நொடியில் ஏறி எதிர்ப்பதற்கு வேண்டும் ஒழுங்குகளெல்லாம் செய்து வைத்துத் தானும் சித்தமாய் பதுங்கியிருந்தான்.

இங்ஙனம் ஒருமணிநேரங் கழிந்தது; கழிந்தவுடன் நெடுந் தூரத்தில் மூன்று பிரயாணிகள் காணப்பட்டனர். அவர்கள் துவர்க் காவியூட்டிய தலைச்சீரா அணிந் திருந்தமை யானும், குறிப்பிட்ட காலத்தில் மூன்று பேராய் நீலகிரிப் பட்டினத்திற்குச் செல்லும்பாதையில் வந்து கொண்டிருந்தமையானும், தாம் எதிர்பார்த்த பிரயாணிகள் இவர்கள் தாமென்று அக்கள்வர் உறுதிசெய்தனர். குதிரைமேற் சவாரிசெய்துவரும் மூவரில் ஒருவன் மற்றிருவர்க்குச் சிறிது முன்னேறி வந்தனன்; இவன் தன் மார்பில் இறுக முடிந்து அணிந்திருக்குங் குப்பாயத்தின் பொற்சரிகைமேலும், பொன் மினுக்குச் செய்த வாளுறை மேலும், குதிரையின் உயர்ந்த சேணங்கலினம் முதலியவற்றின் மேலும் ஞாயிற்றின் கதிர்கள் தோய்ந்து ஒளிர்ந்தன. ஆகையாற் கு டகிலிருந்து நீலகிரி நகருக்குப் போகும் செல்வத்தானும், அதிகாரத்தானும் உயர்ந்த பௌத்த இளைஞன் இவன்தான் என்பதிற் சிறிதும் ஐயம்உற இடமில்லை. இங்ஙனம் ஏதும் சமுசயமின்றி முன்னேவந்து கொண்டிருக்கு மிளைஞன் கட்டிள மையோனாய் மிகவும் அழகுடையனாய் இருப்பதும், அவன் பின்னே வரும் மனிதர் இருவரும் இளமைகழிந்து திண்ணிய உடம்புடையோ ராயிருத்தலும் அங்குப் பதுங்கியிருந்த கள்வர் கண்டுகொண்டனர்.

த.

னே இருளன் ஒரு குறி செய்தலுங் கள்வரெல்லாரும் மரங்களின் நடுவிற் குதிரைமேல் ஏறிக்கொண்டு, முந்திரிக் கொடிகள் பின்னல் பின்னலாய் நெருங்கித் திரை மறைப்புப் போற் படர்ந்திருக்குங் குறுங்காட்டோரத்தில், பிரயாணிகள் கண்களுக்குத் தென்படாமல் எதிர்ப்பதற்குச் சித்தமாய் வந்து நின்றனர். வந்துநிற்றலும், இரண்டாம் தரமும் ஒருகுறி செய்யப் பட்டது. உடனே மான் மந்தையாயினுங் காட்டு விலங்கினங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/55&oldid=1581310" இலிருந்து மீள்விக்கப்பட்டது