உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

25

அதற்கு இருளன் “நீலகிரிப் பட்டினத்திலிருக்கும் பணக் காரன் ஒருவன் வீட்டிற்கு அவன் உரியவன் என்பதற்குமேல் அவனைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. இது நிற்க. நாம் இங்ஙனம் வீண்பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தைக் கழிப்பதை விட, நல்லான் என்னிடத்துச் சொல்லிய ஏற்பாடுகளை உங்களுக்குச் சொல்லுகின்றேன் கேளுங்கள்! நாம் ஆறுபேர் இருக்கின்றோம்; நாம் எதிர்க்கவேண்டியது மூன்றுபேரைத்தான் என்பது தெரியும். இந்த மூவரில் ஒருவன் அதிகாரத்தானும் பொருளானும் உயர்ந்த பௌத்த வாலிபன் என்றும், மற்றை இருவரும் அவனுக்குச் சேவகர் என்றும் அறிவீர்களாக. அவர்கள் செவ்வையான குதிரைகளின்மேல் ஆயுதங்களைத் தரித்து வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை; அதன்மேலும் அவர்களுடைய மனோ தைரியம் வேறேயாக இருக்கின்றது. கூடுமாயின் அவர்கள்மேல் இரத்தஞ் சொட்டாமல் மூவரையுஞ் சிறையாகப் பிடிக்கவேண்டுவது நம்முடைய கடமை” என்று கூறினான்.

66

"ஆ! நாம் துப்பாக்கிளை உபயோகிக்க நேருமாயின் அங்ஙனம் இரத்தஞ் சிந்தாமற் பிடிப்பது மிகவும் வருத்த மாயிருக்குமே” என்று அவர்களில் மற்றொருவன் வினவினான்.

66

அதற்கு இருளன் “இதற்கு மாறாகத்தான் உங்களுக்கு இது சொல்லப் போகின்றேன். அம்மூவரையும் நம்முடைய மலைக் கோட்டைக்கு உயிருடன் கொண்டு போய்விட்டால், நாம் எடுத்த காரியமும் நந் தலைவன் இட்ட கட்டளையும் மிகவுஞ் செம்மையாக முடிந்தனவாகும். ஆதலால், உங்களால் ஆன மட்டும் பார்த்துக் கூடாத விடத்து மாத்திரம் உங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டுத் துப்பாக்கிகளை உபயோகப் படுத்துங்கள். இதுதான் நல்லான் இட்ட கட்டளையும்” என்று கூறினான்.

"மிகவும் வலிமையுடைய ய மலைநாடர்களான நாம் அறுவரும் ஓர் இமைப்பொழுதில் அந்தப் பௌத்தர்கள் மூவரையும் பிடியாவிட்டால், அப்புறம் என்ன இருக்கின்றது?” என்று மற்றொருவன் சொன்னான்.

அதன்மேல் வழிமறிக்கப்படும் பிரயாணிகள் வருகின்ற பாதையை இருளன் பரிசோதித்துக்கொண்டு செல்வானா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/54&oldid=1581309" இலிருந்து மீள்விக்கப்பட்டது