உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் 13

அவ்வானின் தெளிநீலவண்ணம் இடை யறுந்து போகாமல் ஒரே ரஒழுங்காய்த் தொடர்புற்று வளைவாய்த் திகழ்ந்தது.

இப்போது இக்குறுங் காட்டிலிருந்த ஆட்கள் அறுவரும், முன்னதிகாரத்தில் நாங்காட்டிய கள்வர் கூட்டத்திற் சேர்ந்த வர்கள் என்றறிய வேண்டும். நாம் முன்சொல்லியவாறே உடை உடுத்துப் படைக்கலங்கள் அணிந்திருந்தனர். ஆயினும், இப்போது சுழல் துப்பாக்கிகளைத் தாம் வேண்டியபோது கையாளத் தக்கவகையாய் முதுகின் மேற்றொங்க விட்டிருப்பது ஒன்று தான் வேறுபாடாகத் தோன்றுகின்றது.

ஒருவன்

அவர்களுக்குத் தலைவன்போற் காணப்பட்ட "இவ்விடந்தான். நாம் தெரிந்து கொண்டபடி நாம் விரும்பிய காரியம் இப்போது சென்று கொண்டிருக்கும் நாழிகைக்குள் முடிந்துவிடும். வாருங்கள். நம்முடைய குதிரைகளை இக்காட்டுக் குள்ளே கொண்டுபோய் விட்டு மிகுந்த நேரமுங் கொழும்புல் மேயச் செய்விப்போம்.” என்று அழைத்தான்.

66

இருளா, இப்போது நீ சொல்லிய கட்டளைகள்?” என்று மற்றொருவன் வினவினான்.

“அவை சுருக்கமாயிருந்தாலும், நம்முடைய தலைவன் எப்போதும் நமக்கு இடுங்கட்டளைகளைப் போலவே கடுமையாக இருக்கின்றன” என்று இருளன் விடை பகர்ந்தனன்.

66

ஞ்

அதுவேயுமன்றி, அவை மேயப்படுவதற்கும் இடஞ் செய்கின்றன. நம்முடைய தலைவனாகிய அப்பெரிய பயங்கர மான நல்லான் தன் கருத்தையும் தான் முடிக்குங் காரியங் களையும் எனக்குங்கூடச் சொல்லுவதில்லை. இங்கே நம்மை யனுப்பி விட்டதுபோலவே தானும் மற்றோர் இடத்திற்குப் போயிருப்பதை ஊகிக்கும்போது, சந்திரனாற் சொல்லப்பட்ட ஒரு செய்தி அல்லது ஓர் உபாயத்திற்கும் இதற்கும் எதோ சம்பந்தம் இருப்பதாகத் தெரிகின்றது” என்று இருளன்

சொன்னான்.

"சிலகாலமாய்

மூன்று நான்கு தரம் நம்முடைய தலைவனிடம் வந்து கொண்டிருக்கும் சந்திரன் என்கின்ற அவ்விளைஞன் யார்" என்று அவர்களில் மற்றொருவன் வினவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/53&oldid=1581308" இலிருந்து மீள்விக்கப்பட்டது