உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

அதிகாரம் - 2

வழி மறித்தல்

இப்போது சொல்லப்படும் விஷயங்கள் முன்னதிகாரத்திற் கூறிய கருமங்கள் நடந்த மூன்றுநான்கு நாட்களின் பின்

நேர்ந்தனவாகும்.

ஞாயிறு கீழ்த்திசையிற் றோன்றுகின்ற சமயத்தில் ஆறுபேர் குடகிலுருந்து நீலகிரி நகரத்திற்குச் செல்லும் பாதையை அடுத்து அடர்ந்திருக்குங் குறுங்காட்டின் நீழலில் தங்கி யிருந்தனர். அவர்கள் ஏறி வந்த குதிரைகளின் நிலைமையைப் பார்க்கும் போது அவர்கள் இரவிற் சில நாழிகைகளாக வழி நடந்து வந்திருக்க வேண்டுமென்பது விளங்கிற்று. இவர்கள் தங்கிய

ம் நீலகிரி நகரத்திற்கு நாற்பதுமைல் தூரத்திற்கு இப்பால், மேற்கணவாய் மலைத்தொடருக்கு அருகாமையில் உள்ளது. ஒருயாண்டில் முக்காற் பங்குபருவம் மிக இனியதாய் விளங்கு வதான அம்மலைநாட்டில், இவ்விடியற் காலமானது மிகவும் அழகிதாகப் பொலிவுற்றது. பறவைக்குழாங்கள் மரங்களின்மேற் பாடிக் கொண்டிருந்தன; அன்னப்புட்கள் கால்வாய்களிற் செருக்குடனே மிதந்து கொண்டிருந்தன; கொழுவிய மலர்கள் இதழ்விரிந்து காற்று வாட்டத்தில் நறு மணம் பரப்பின; அளவிறந்தனவாய் முழுமுழுப் பருமனுடைய வான நவமணி களுங் குலைகுலையாய்த் தழைகளின் இடையே தொங்கிக் கொண் டிருப்பதுபோலத் தோன்றும். மாதுளம் பழம், எலுமிச்சம்பழம், கொடிமுந்திரிப்பழம் முதலியவற்றின் அறத்திணிந்து விளங்கும் வண்ணங்களின் மேல் ஞாயிற்றின் இளங்கதிர்கள் தோய்ந்து மினுமினுவென்று மிளிர்ந்தன; வானமென்னும் நீலவிதானத்தின் மேல் மேகக்கறை ஒருசிறிதும் இல்லாமையால் அதுதெளிந்து காணப்படுவ தாயிற்று. மாற்றுயர்ந்த பொற் கோளம்போற் பிரகாசிக்கும் இளஞாயிறு தன் கதிர்களைச் சூழவிரித்து நீலநிறத்தோடு விரசும் இடந்தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/52&oldid=1581306" இலிருந்து மீள்விக்கப்பட்டது