உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் - 13

இங்குபிடித்துக்கொண்டு வந்து வைத்துக்கொள்வேனாயின்

என்பதற்குள்;

66

அவன் செத்தாலுஞ் சாவான் ஒழிய இவ்விரகசியத்தை மாத்திரஞ் சொல்லான்” என்று சந்திரன் இடையிற்கூறி “இக் காரியங்களெல்லாம் எனக்குத்தெரிந்தபின், அவன் கடைசியாகப் பயணப்பட்டுப் போனபோது அவன் கூடவே போவதற்கு நான் சமயம் பார்த்துக் கொண்டிருக்கவில்லையா-” என்று சொல் வதற்குள்;

66

நல்லது நல்லது” என்று அத்தலைவன் அவசரமாய் டைமடக்கிச் “சந்திரா, நீ சொன்னவாறே ஆகட்டும்! அதைக் குறித்து நான் ஆராயும்போது, நீ செய்த உபாயப்படி செய்தலைவிட வேறுவழியில்லை, அவ்வுபாயம் சிறந்ததென்று உரைப்பதற்கும் நான் பின்வாங்கேன். பெரியநன்மை கிடைப்ப தாயின், அது மிகவுங்கலவரமான உபாயமென்று சொன்ன தனால் உண்டாகும் டைஞ்சல்களை நினைந்து பின் வாங்குவேன் என்று நினையாதே, நண்பா சந்திரனே, செய்து முடிக்கக்கூடிய காரியத்திற்கு எளிதான வழியெதுவென்று காண்பதே எனக்கு வழக்கம். இலேசிலே செய்து முடிக்கக்கூடாத காரியமாயிருந்தால் மாத்திரம் சிறிது சுற்றான வழியிற் செல்ல முயல்வேன். இனிவிரித்துச் சொல்லவேண்டுவதில்லை; போதும்! இப்போது மாலைக்கு உணவு சித்தமாயிருக்கும் நாம் அதனை உண்பேம். உண்டபின் நீ என்பக்கத்திற் படுத்து அயர்வு தீர்த்துக்கொண்டு விடியற்காலையில் நீலகிரி நகரத்தில் உன் தலைவனிடம் போய்ச்சேர்” என்று மொழிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/51&oldid=1581305" இலிருந்து மீள்விக்கப்பட்டது