உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

புறத்தேயிருந்து

21

ளேனும் நரிகளேனும் நுழைய மாட்டா என்றும், அவ்விடத்தைச் சுற்றி அரைப்பட்டிகைபோல் உள்ள செங்குத்தான மலைகள் பார்ப்பவர்க்குத் திரை போல் அவர் பார்வையினைத் தடைசெய்தலே யன்றி வெளியிலி ருந்து போம் மக்கள் அடிச்சுவடு தோயாவண்ணம் எழுப்பிய வரம்புபோலவும் குளிர்காலத்துக் கொடுங்குளிர் காற்றும் வேனிற்காலத்து வெங்கதிர்வெப்பமும் நுழையாவாறு கட்டிய அரண்போலவும் பயன்படுகின்றன என்றும், கடைசியாகப் பொற்குவியலும் வெள்ளிக்குவியலும் புதையலாயுள்ள கனிகளும் உயர்ந்த முழுமணிகள் குவிந்த முழைஞ்சுகளும் உள்ளன என்றும் நாம் விளங்க அறிகின்றோம்." என்று பெருகியெழுந்த மகிழ்ச்சி தணிந்தாற்போலத் தாழ்ந்த குரலிற் பேசினான் அத்தலைவன்.

“பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு இம்மலை நாடர்க்குள் வழங்கிவரும் அவ்வரலாற்றினை நீர் நும் உள்ளத்திற்பொதிந்து வைத்திருந்தும், நான்சொன்ன அக்கதை யினை நீர் ஒரு கணமாவது ஐயமுறத்தலைப்பட்டது எனக்கு மிகவும் வியப்பாயிருக்கின்றது" எனச் சந்திரன் சொன்னான்.

66

“நான் அதனை ஐயப்படவில்லை; முதலிலிருந்தே நான் அதைப் பற்றி ஐயப்படாவிட்டாலும், நீ சொன்னவற்றை எல்லாம் உண்மையாகவே நம்பிச் சொன்னாயோ என்றறி யத்தான் பலகேள்விகள் கேட்டேன் என்று எதற்கும் அஞ்சாத தன் இயல்புக்கு இசையைப் பொறுமையான குரலோடு அத்தலைவன்

பேசினான்.

66

“நான் சொன்னவற்றில் நீர் ஏன்தான் ஐயப்படல் வேண்டும்" என்று சந்திரன் கேட்டான்.

அவன் என் நிலைமையில் உள்ள ஒருவன் தன் ஆள் சொல்வதை ஐயப்படாவிட்டாலும் ஒரு தரத்திற்கு இரண்டு தரம் ஓர் உண்மையை ஆய்ந்தறியவேண்டாமா? என்று விரைந்து கேட்டுச் சந்திரா! நான் சொல்வதைக்கேள். உன்னைக் கடைசியாக நான் கண்டதுமுதல் நான் நினைத்தது இது! நீ சொன்ன கலவரமான உபாயத்தில் தலைகீழாய் விழுந்து வருந்து தலைகாட்டினும், அவன் மேற்பாய்ந்து விழுந்து அவ்விரகசியம் தெரிந்த அவனைக்கொண்டே அதனைத்தெரிந்து கொள்ளல் நல்லதன்றோ! என்னை நம்பு; உன் தலைவனை ஒருமுறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/50&oldid=1581304" இலிருந்து மீள்விக்கப்பட்டது