உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

66

மறைமலையம் 13

“ஆம்! அதனாலேதான் நீ முதன்முதல் அக்கதையினை எனக்குச் சொன்னபோது நான் அவ்வளவு கவனமாய்க் கேட்டேன். நான் குழந்தையாயிருந்தபோது என் பெற்றோர்" - என்று சொல்லும் போதே அத்தலைவன் முகம்வேறுபடப் பெருமூச்சுவிட்டு "ஆம் நான் குழந்தையாயிருந்தபோது இறந்துபோன என்பெற்றோர், தமிழர்க்கு முதற்றந்தையுந்தாயும் றைவனாற் படைக்கப்பட்ட காலத்தில் இம்மலைத்தொடர் இடையில் உள்ள தாமரைவேலியில் அவ்விறைவன் கட்டளை யால் தங்கியிருந்தனரெனவும், அவருக்குப்பின் மக்கள் யாரும் அதற்குட் புகுத இடம் பெறுவதில்லை எனவும், ஆயினும் ஒரோ வொருகால் நெடுங்காலம் இடையிட்டுத் திருவருளாணையாற் சலுத்தப்படுகின்ற பரிசுத்தனானதுறவி பரிசுத்தமான அவ் விடத்தைக் குறுகி ஆண்டுச் சுற்றிலும் உயர்ந்து விளங்கும் மலைகளின் நடுவிற் கீழே பொலிந்துதோன்றும் இன்பமான இளங்காவினை காண்பன் எனவும் சொல்வது வழக்கம்” என்றான்.

“என்னுடைய கதையானும் நீங்கள் சொல்லியவற்றானுங் குறிப்பிக்கப்பட்ட அவ்விடந்தான் நந்தமிழர்க்கு முதற்றந்தையுந் தாயும் உறைந்த இன்பநிலமென்று நான் சொல்லவில்லை. என் அறிவுக்குப் புலப்பட்டபடி கேட்டால், அஃது அவ்விடம் அன்றென்பதே என் கருத்து. நம்முதற்றந்தை தாயார்க்குப்பின் அவ்விடம் அழிந்து போயிற்றெனல் தான் உண்மை; ஆயினும் ம்மேற்கணவாய் மலைத்தொடரில் எங்கோ ஓரிடத்தில் அவர் இருந்த அம்மலையவேலிப் பெயர்கொண்ட ஓரின்ப இளங்கா ளங்குதல் வேண்டுமென்பது மாத்திரம் நான் உறுதியாகச் சொல்வேன்." இனி நான் சொன்ன மற்றை வரலாறுகளைக் கொண்டு, அங்குப் பொற்குவியல் உண்டோ இல்லையோ என்பதனை நீங்களே அறிந்துகொள்ளல் வேண்டும். ஆனால், நான் சொன்னது மலையநாட்டில் வழங்கும் வரலாற்றுடன் மிகவும் பொருந்தியிருக்கின்றது என்று சந்திரன் சொன்னான்.

"அவ்வரலாற்றினால், அது போன்ற இன்பமான இடங்கள் இம்மலைத்தொடரிற் பல இருக்கின்றன என்றும், அவ்விடங் களில் மிகச் சிறந்த மலர்கள் மாத்திரம் பூக்கின்றன, அருமையான இளமரங்கள் மாத்திரங்கொழுக்கின்றன என்றும், பாம்பு முதலான ஊர்வனவற்றிற்கு உணவாகுந்தழைகள் அங்கில்லை என்றும், அமிழ்தமயமாயுள்ள அத் தனித்த இடங்களில், புலிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/49&oldid=1581303" இலிருந்து மீள்விக்கப்பட்டது