உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

19

இதனால், நாகநாட்டரசி யிடத்தும் நீலலோசனன் என்னும் பௌத்த இளைஞனிடத்துங் கருதிய வண்ணம் காரியத்தை முடித்து வந்தாயென்று நினைக்கின்றேன்” என்றான் அத்தலைவன்.

“மேற்கரை என்னுந் தன் நகரத்திலிருந்து பயணம் போவதற்கு மிகவும் இசைந்தவழியினை நீலலோசனனுக்குக் காட்டியது போலவே, நாகநாட்டிலிருந்து வரும் குமுத வல்லிக்குங் காட்டியிருக்கின்றேன்” என்று அவ் விளைஞன் ஒத்துக்கூறினான்.

“சந்திரா, நன்கு செய்தாய்" என்று தன்முகத்தில் மகிழ்ச்சி தோன்றச் சொன்ன அத்தலைவன் மீண்டும் “முன்னொருமுறை நீ எனக்கு மிகவும் நுட்பமாய் எடுத்துச்சொன்ன வரலாற்றில் உனக்கு நம்பிக்கை உண்டோ என்பதனைத் திரும்பவும் அறிய விரும்புகின்றேன். ஏனெனில் பெறப்படுகின்ற அப்பொருளின் உயர்ச்சியை நோக்கினல்லது, அவ்வளவு பெரியதோர் அபாயகரமான காரியத்திற்புகுவதற்கு நான் நினைக்கமாட்டேன்” என்று சொன்னான்.

“நான் நுணுக்கமாய் விரித்துச்சொல்லிய ஒவ்வொன்றும் உண்மையாமென்றே நம்புகின்றேன். தாமரைவேலி என்று சொல்லுதற்குப் பெரிதும் வாய்ப்புடைய மலையவேலியின்கண் அப்பெரும் பொருள் புதையலாய் இருக்கின்றது” என்றான் சந்திரன்.

“புதுமை! புதுமை! இம்மேற்கணவாய் மலைத்தொடர் முழுவதும் எனக்குத் தெரியாத சந்து, பொந்து, மூலை,முடுக்கு ஒன்றும் இல்லையென்று என்னைப் பெரிதாக எண்ணியிருந்த எனக்குந்தட்டுப்படாமல் தாமரைவேலி என்பதொன்று இருத்தல் பெரிதும் வியப்பாயிருக்கின்றது! அங்ஙனம் ஒன்றிருக்குமென இதுவரையில் நான் ஐயப்பட்டது மில்லையே! ஆயினும், அப்படியொன்று இருக்கலாம்:- அப்படியொன்று இருக்கத்தான் வேண்டும்” என்று காதிற்கேட்கும் படியாகவே அத்தலைவன் முனகினான்.

66

அஃதப்படித்தான்! உயர்ந்தோய். மலை நாடர்க்குள் வழங்கும் இச் செய்தியாவது உமக்கு எட்டியிருக்கவேண்டுமே" என்று சந்திரன் அழுத்திப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/48&oldid=1581302" இலிருந்து மீள்விக்கப்பட்டது