உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம்

13

அவன் கண்கள் பெரும் பிரகாசமுடையனவா யிருந்தன. அவன் முகத்திலுள்ள மற்றை உறுப்புக்களெல்லாம் கடைத்தெடுத்தன போல் இனிதமைந் திருப்பவாயின; அவன் முகத்தை ஒரு பக்கச் சாய்வாய்ப் பார்த்தால் மாத்திரம் மூக்கு கழுகுபோற் சிறிது வளைவாயிருத்தல் தோன்றும். கன்ன மீசையும் மீசையுங் காணப்பட்டன. மோவாய் மயிரின்றி நன்றாய்ச் சிரைக்கப் பட்டிருந்தது. கள்வர் கூட்டத்திற்கு உரிய வண்ணம் அவன் அணிந்திருந்த ஆடை தன் ஆட்கள் அணிந்திருந்தவற்றைக் காட்டிலும் உயர்ந்ததாயும். அரைக் கச்சுப் பூத்தொழில் செய்யப்பட்டதாயும் கைத்துலக்கும், சுரிகையும் வெள்ளிப்பிடி யுடையனவாயும், குற்றுடைவாளும் அவ்வாறே மணிகள் அழுத்திய பிடியுள்ளதாயும். பாயின்மேல் அவன் அருகிற் கிடந்த சுழல் துப்பாக்கி திறமையான தொழிற்பாடு உடையதாயும் விளங்கின. கூடாரத்திற் றொங்கவிட்டிருந்த வெள்ளி விளக்கு இவன் முகத்தில் ஒளிபரப்பினமையால் இவன் முகக்குறிப்பை நன்கு அளந்து பார்த்து இவன் மாட்டு யார்க்கும் அஞ்சாத ஒரு வன்கண்மையும், மன ஊக்கமும், எவற்றையும் பொருள் செய்யாது முடிக்கும் பேராற்றலும் பெருந்திறமையும் அமைந்து கிடத்தலை எளிதிலே அறிந்துகொள்ளலாம். அவன் மற்றையோரைக் காட்டிலுந் தனக்குள்ள உயர்ச்சியினையும் நன்றாய் அறிந்திருந் தான். இங்ஙனம் அவன் எல்லாவகையானுந் தன் கீழ் உள்ளார். தன்சொற்படி அடங்கி நடந்து தன் இடத்து அன்புடையவராய் நடந்து கொள்ளவும், தான்வேண்டும் பொழுது அவரைவலிந்து ஒன்று செய்யும்படி வற்புறுத்தி முடிக்கக்கூடிய ஆற்றலும் உயர்ச்சியும் உள்ளவனாயிருந்தனன்.

அவ்விளைஞனுக்கு இக்கள்வர் தலைவன் புதியன் அல்லன். கூடாரத்தினுள் நுழைந்தவுடனே அவ்விளைஞன் இவனை மிகவும் மரியாதையுடன் வணங்க அத்தலைவனுஞ் சிலசமயங்களில் உயர்ந்தோர் தம்மினும் தாழ்ந்தோரை நண்புடன் அன்பாய் நடத்து முறைப்படி நேயர்க்குரிய இனிய மொழிகள் சொல்லி அழைத்தான்.

“சந்திரா, நின்வருகை நன்றாகுக. என்னசெய்தி கொண்டு வந்தாய்?” என்று அக்கள்வர் தலைவன் கேட்பானா யினன்.

“அதற்கு எல்லாஞ் செவ்வையாக நிகழ்கின்றன” என்று அவ்விளைஞன் மறுமொழி தந்திட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/47&oldid=1581301" இலிருந்து மீள்விக்கப்பட்டது