உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

17

குதிரையினைப் பார்த்துக்கொள்; உங்கள் தலைவனோடு நான் உடனே பேசல்வேண்டும்" என்று அவ்விளைஞன் மொழிந்தான்.

இரண்டாவது பேசின கள்வன் அப்படியே அவனைத் தன்பின்னே வரும்படி அழைத்துக் கொண்டு போவானா யினான். வழிதுறையில்லாத அக்காட்டின் இடையிலே இருவரும் புகுந்து கூடார முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு வெளிச்சத் திற்கு அப்புறம் போய் விட்டார்கள்; எங்கும் ஒரே இருளாய் இருந்தது. ஆனாற் கள்வனோ தான் செல்லும் வழியினை மிகவும் நன்றாய் அறிந்தவன்போல் விரைவாக நேரே சென்றான். இளைஞனோ அவன்பின்னே ஒட்டிக் கொண்டு போயினான். ஓசையின்றி எங்கும் இருண்டுகிடக்கும் அவ்விடத்தில் சடுதியிலே யாரோ காவலாளன் அறைகூவும் ஓர் ஒலி கேட்டது. உடனே அதற்குக், கூடப்போகுங் கள்வன் எதோ விடை சொன்னான், சிறிது தூரத்தில் மரங்களின் நடுவில் மற்றொரு வெளிச்சந் தோன்றச் சில நிமிஷங்களில் ஒரு கூடாரத்திற்கு முன்னே தீ எரியும் முற்றத்தில் இருவரும் போய்ச் சேர்ந்தார்கள்.

முன்னேகண்ட பாசறை வீட்டைக் காட்டினும் இக் கூடாரம் பெரியதாயும் உயர்ந்த தன்மையுடையதாயும் இருந்தது; இதன்படாத்திலுள்ள தோலின் ஓரங்களில் நீலப்பட்டுத் தைக்கப்பட்டிருந்தது; இதன் நுழைவாயிலும், நீலப்பட்டினாற் செழுமையான பூத்தொழில் செய்யப்பட்ட திரை இடப்பட் டிருந்தது.தீயில் மணங்கமழ உணவு சமைக்கும் மட்பாண்டத்தைப் பார்த்துக் கொண்டே ஓர் ஏவற்காரன் உட்கார்ந்திருந்தான். இளைஞனை அழைத்துக் கொண்டு வந்த கள்வன் கூடாரத் துள்ளே அவனை நுழைந்து போகும்படி சொல்லி விட்டுத் தான் வெளியே நின்றுவிட்டான்.

அக்கூடாரத்தினுள்ளே நிலத்தில் விரிக்கப்பட்ட பாயின் மேல் இருபத்துமூன்று அல்லது இருபத்துநான்கு வயதிற்கு மேற்படாத ஒருவன் சாய்ந்து கொண்டிருந்தான்; அவன் முகத்தில் பிறரை அடக்கியாளும் பொருட்டு இயற்கையிலேயே அமைந்துள்ள ஒருகளை தோன்றிற்று. அவன் உயரமாகவும் மெல்லிதாகவும் இருந்தானாயினும். ஒத்துச் சமைந்த அவன் உடம்பும், செவ்வையாகப் பொருத்தப்பட்ட உறுப்புகளும் அவன் மெய் வலியின் மிகுதியினை இனிது விளக்கின. அவன் தலைமயிர் கரியதாய் மிக அடர்ந்திருந்தது. அவ்வாறே மிகவும் கரியவான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/46&oldid=1581300" இலிருந்து மீள்விக்கப்பட்டது