உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் - 13

விளைஞனுடன் வந்த குதிரையைக் கொண்டுபோய்த் தீனி முதலியன அளித்தான்.

"உண்மையாகவே இது நேர்த்தியான குதிரை” என்று ஒருவன் அதன் கழுத்திற் றட்டிக்கொடுத்து “உனக்கு இது நல்ல உதவி செய்தது” எனக் கூறினான்.

“ஆம்” என்று அவ்விளைஞன் மறுமொழி தந்து “எனக்கு இன்னும் நெடுநேரம் இருந்தது பற்றி இந்நாள் முழுமையும் மிகமெதுவாய் அதனை நடத்திக்கொண்டுவந்தேன். உங்கள் தலைவனைத் தவறாமற்காணுஞ்சமயம் நன்கு அறிவேனாதலால்

இராப்பொழுதிற்குமுன் இங்குவர முயன்றிலேன்” எனச்

சொன்னான்.

"வேலையிருந்தால் ஒழிய” என்று அக்கள்வன் அருகி லுள்ள தீ வெளிச்சத்தில் ஒரு குறிப்புத் தோன்றநகைத்து “எங்கள் தலைவனுக்கு எல்லாநேரமும் ஒன்றுதான். அது நிற்க, உன் குதிரையைப்பற்றிப் பேசுமிடத்து" என்று தொடர்ந்து குதிரை மாமிசத்திற் பழக்கப்பட்டவர்போல் அதன் உடம்பின் ஒழுங்கை யும் ஒவ்வோர் உறுப்பின் அமைவையும் மெதுவாக அளந்து நோக்கி “ஆ ஆ இது மிக உயர்ந்த பிராணி” என மொழிந்தான்.

66

இந்தச் சாதிக்கு உரிய அடையாளம் இங்கே இருக் கின்றது. என்று அவ்விளைஞன் அதன் பின் றொடையில் தீய்க்கப்பட்ட ஒரு சிறிய தழும்பைக் குறித்துக் காட்டி அவனோடு ஒத்துப் பேசினான்; ஏனெனில், அம்மலைநாட்டிலுள்ள குதிரைகளின் சாதிப் பகுப்பினை வழுவாது நெறிப்படப் போற்றி வைப்பதற்கு அவர்கள் அங்ஙனம் அடையாளம் இடுதல் வழக்கம்.

"உண்மை! இந்தச் சாதி நல்லது தான்” என்று அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவன் வியந்தான். “ஆயினும், எங்கள் தலைவன் ஏறிச் செலுத்துகின்ற குதிரையினும் து தாழ்ந்ததுதான். ஏனென்றால், அதன்பின் தொடையில் இலாடக் குறி யிருப்பதனை நான் சொல்லும்போது இளையோய், நீயே அறிவாய்” என்றான்.

"நண்பனே, நின் தலைவன் குதிரையினை நான் அறியேன் போலவும், குதிரைச்சாதிகளுள் அதுமிக அருமை யான தென்பதைக் குறிக்கும் இலாட அடையாளத்தை நான் காணேன் போலவும் நீ பேசுகின்றாய். அது நிற்கட்டும், எனக்காக என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/45&oldid=1581299" இலிருந்து மீள்விக்கப்பட்டது