உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

15

வெள்ளாட்டுத் தோலானும் மான்றோலானுந் தைத்த போர்வை யிட்டுச் சமைத்த ஆறு கூடாரங்களுள்ள ஒரு பாசறையினை அடைந்தனன்.

இனி இப்பாசறை வீட்டு முற்றத்தின் இரண்டிடத்தில் நெருப்புக் கொழுந்துவிட்டு எரிந்தது; இந் நெருப்பண்டையில் சிலர் மாலைக் காலத்திற்கு வேண்டும் உணவு சமைத்துக்கொண் டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நீண்டுயர்ந்து வலியராயும் அழகாயும் இருந்தனர். தலையில் சிவப்புக்குஞ்சந் தொங்கும் ஆட்டுத்தோற்குல்லா அணிந்திருந்தார்கள். அவர்கள் அடியி- லிட்டிருக்கும் தோற்சட்டை காலுக்குப் பாதுகாவலா யிருப்ப தன்றி நடைவிரைவுக்குத் தடை செய்வதில்லை. அது வல்லாமல், கைத்துப்பாக்கியும் சிற்றுடைவாளுஞ் செருகிய அரைப் பட்டி கையில் கூரியகத்தியும் தொங்கவிட்டிருந்தார்கள்.கூடாரங் களுள் எட்டிப்பார்த்தால் எவ்வளவு ஆட்கள் இருந்தார்களோ அவ்வளவு துப்பாக்கிகளும் இருந்தன. சுருங்கச் சொல்லுங்கால், ம்மலையநாட்டில் நெடுங்காலம் வழிப்பறி கொள்ளை செய்துகொண்டு வருபவராயும், இந்நாட்டிற் புகுந்த நரசிங்க வரும சோழன்படைக்குக் கொடும்பகைவராயுமுள்ள கள்வர் கூட்டத்தினருள் ஒரு பகுதியினராக இங்குள்ள இச் சிறுகூட்டத் தார் காணப்பட்டனர்.

இனி இப்பாசறை வீட்டண்டை வந்துகொண்டிருக்கும் ளைஞன் தன்குதிரைக் குளம்படியின் ஓசை அச்சிறு கூட்டத்தார் காதிற் படுமென்பது தெரிந்தவுடனே அவன் தன் இதழ்களைக் குவித்துப் பளீரென்று ஒரு சீழ்கை யடித்தான். அச்சீழ்க்கை ஓசை அக்காடெங்கும் உருவிச் சென்றது. அக்கள்வர் கூட்டத்தார் தங்கள் நண்பன் வரவை அறிவதற்கு இச்சீழ்க்கை யோசை ஓர் அடையாளம் போலும்! மிகவும் திணிந்து பின்னிக்கிடத்தல்பற்றி அந்நாட்டின் வழியே நடத்திக்கொண்டு வந்த தன் குதிரையோடு அவ்விளைஞன் அவர் எதிரிற் புகும்பொழுது நெருப்பின் வெளிச்சம் அவன் முகத்திற்படவே அவரெல்லாரும் உடனே அவனைத் தெரிந்துகொண்டனர். அவனோ அவர்களையும் அவ்விடத்தையும் புதிதுகண்டவனாய் இல்லை; அவர்களும் அவ்வாறே அவனோடு நன்கு பழகினவர் களைப்போல் இருந்தனர். நண்பர்க்குரிய முகமனுரைகள் ஒருவர்க்கொருவர் வழங்கினர்; அவர்களுள் ஒருவன் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/44&oldid=1581298" இலிருந்து மீள்விக்கப்பட்டது