உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் 13

போல் பார்க்கவேண்டுவ தில்லையாம்; இப்போது அதனைச் சிறிது நேரத்திற்கு ஒரு தரம் நிறுத்திக் கீழ் இறங்கி நிலத்திற் கொழுமையாய் வளர்ந்திருக்கும் இனியபுல் மேயவிட்டுத் தான் தீவிதிராட்சக் கொடி படர்ந்த மரநிழலில் இருந்து சாய்ந்து காண்டு தலைக்குமேலே குடும்புகுடும்பாய்த் தொங்கும்பழக் குலையில் ஒன்றுபறித்துத் தின்னுவான்; திரும்பவுஞ் சிறிது நேரங்கழித்துப் பயணம் பண்ணுவான்; இவ்வாறு நாழிகையாக அவன் வந்து கொண்டிருந்தான்.

சில

இனி இவன்போகுஞ் சந்துவழி மிக நீண்டதாயிருந்தாலும் மெத்தென்ற புற்கற்றை நெடுக விருத்தலாற் குதிரைக்கு வழியிற் சிறிதும் வருந்தமில்லை. அதுவேயுமின்றி அவ்வழியி லிடை யிடையே பல சிற்றருவிகள் ஓடிவருவதால் குதிரை தன் கால்களைக் குளிரச் செய்துகொண்டு தண்ணீர் அருந்தித் தாகத்தையுந் தணித்துக் கொள்வதாயிற்று. இனி ஞாயிறு மறைகின்ற சமயத்தில் இவ்விளைஞன் அச்சந்துவழியின் முடிவிற்போய்ச் சேர்ந்தான்; நடுவில் டைவெளி யாயுள்ள

மேட்டுப்பாங்கான நிலத்திற்கு இருபக்கத்தும் செங்குத்தாய் ஆழ்ந்துகிடக்கும் பள்ளத்தாக்குள்ள மலைச்சாரல் தொடர் புற்று இருக்கின்றது. இம் மேட்டுப்பாங்கான மலைத் தொடர்பி னுள் அவன் நுழைந்து போவானாயினான்; இங்ஙனம் போகப் போக இருளோவென்று கருகித்தோன்றும் மலைத் தோற்றம் அவன் சிலநாழிகை முன்னே வழிநடந்துவந்த வளவிய நிலத்தின் றன்மையோடு எவ்வளவு மாறுபட்டுக் காணப் படுகின்றது! மாலைப்பொழுது முற்றும் வந்து இருண்டவுடனே, கரடு முருடான இம்மலைப்பாங்கில் விரிந்து கிடக்கும் ஒரு காட்டுக்கு அருகேவந்து சேர்ந்தான். அவன் அங்குள்ள வழித்துறைக ளெல்லாம் முற்றுந் தெரிந்தவன் போலவும், அங்கு எதற்கும் அஞ்சாதவன் போலவுங் காணப்பட்டான். மரங்கள் ஒன்றோ ான்று பிணைந்து வழிதுறையின்றி எல்லாம் குழம்பலாய்க் கிடக்கும் அவ்விருண்டகாட்டின் டையே புதிதாக வழிச்செல்வோர் யார்க்கும் அறியக்கூடாத வழியை இவன் கூர்மையான கண்கள் தெரிந்தெடுத்தன; பின்னும் ஓர் அரை நாழிகையில் தழைக் கும்பின் இடையிடையே வெளிச்சந் தோன்றுதலுங் கண்டுகொண்டான்; மற்றுஞ் சில நிமிஷங் களுள், மரங்களின் நடுவில் குறுக்கு உத்திரங் கட்டி அதன்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/43&oldid=1581297" இலிருந்து மீள்விக்கப்பட்டது