உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

13

றிற்று. அவன் இடுப்பில் இறுகப் பிணித்திருக்கும் அரைக்கச்சில் இலேசான கொடுவாள் ஒன்று தொங்கினது, மெல்லிய தோலினால் தைத்த அடிச்சட்டை முழங்கால் அளவும் மாட்டி யிருந்தான். அவன் ஏறிச் செல்லுங் குதிரையின் சேணங் கலினம் முதலியன எல்லாம் நடுத்தரமான சிறப்புடையன; சுருங்கச் சொல்லு மிடத்து, இவ்விளைஞன் பெரிய பிரபு வீட்டிலுள்ள ஏவலாளி களில் உயர்ந்த நிலையில் உள்ளவனாகத் தோன் றினான்.

இனி

ஒருவகையான குறிப்புள்ள இவன் கண்கள் பெருத்து நீல நிறமுடையனவாயிருந்தன. அவற்றின் குறிப்பை நோக்காமல் அவை தெளிவாக இருத்தலை மாத்திரம் பார்ப்பவர்க்கு அவை மிகவும் அழகாகத் தோன்றும், நல்ல குணங்களுக்கு ஓர் உறை விடம் போலத் தோன்றி அகன்று உயர்ந்த நெற்றி பொன்னிறமாய் மழமழவென்று விளங்குதலால் அவன் கண்களில் உள்ள கொடுங்குறிப்பு அவ்வளவாகத் தெரித லில்லை. அவன் முகத்தின் கீழ்ப்பாகங்களெல்லாம் அவன் நல்லன் என்றறியும்படியாக அமைந்திருந்தன. மிகச் செழுமை யாக அவன் இதழ்கள் அவனிடத்துக் கள்ளங்கவடு இல்லாமை காட்டுவன போல் இருந்தன. அவ்விதழ்கள் விரியுந்தோறும் இடையே மயக்குந் தன்மையுடைய நகையொளி தோன்றுதல் போல மற்றை ஆண் மக்களிடத்தில் பார்த்தலரிது. அங்ஙனம் நகைதோன்றும் போதெல்லாம், நெய்ப்பான பவளத் துண்டின்மேல் ஞாயிற்றின் கதிர் விரிதல் போலவும், இங்குலிகச் செப்பின் வடிம்பில் விழுமிய முத்துக்கள் பதித்ததுபோலவும் இரண்டு வரிசையாகப் பற்கள் தோன்றும்.

இனி இவ்வாறு வருணித்துச் சொல்லப்பட்ட இளைஞன் குடகிலிருந்தாயினும், இன்னும் அதற்குந் தொலைவிலுள்ள நாகநாட்டிலிருந்தாயினும் வந்தவன்போல்மேல் கடற்கரையைச் சார்ந்த மேற்கணவாய் மலையநாட்டில் வந்து கொண்டிருந்தான். இவன் நீலகிரி நகரத்திற்கு நேரே போகும் வழியிற் செல்லாமல் டையே மேற்கண்வாய் மலைச்சாரலிற் கொண்டுபோய்விடுங் குறுகலான ஒரு சந்து வழியில் இப்போது திரும்பிச் சென்றான். இவன் சில நாட்களாக வழிநடந்து வந்திருக்கவேண்டும்; னெனில், சிறிது தூரமாத்திரம் பயணம் பண்ணியிருந்தால் தன்குதிரையைப் பற்றி இப்போது கவலை கொண்டு பார்ப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/42&oldid=1581296" இலிருந்து மீள்விக்கப்பட்டது