உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் - 13

தோற்றமும் உடையராய் இருப்பர்; பெண்மக்கள் எல்லாரும் தம் உடம்பின் தெளிவான சாயலானும், உறுப்புக்களின் மிகத் திருந்திய அமைப்பானும், அவ்வுறுப்புக்களெல்லாம் ஒரே ஒழுங்காய்க் கனிந்த அழகுடைமையானும், உலகமெங்கும் பிரசித்தி பெற்றுச் சிறக்கின்றார்கள்.

ய்

கி.பி, 625-வது வருடம் இளவேனிற் காலத்திடையில் ஒருநாள் ஒர் இளைஞன் மிகவும் அழகான ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு நாம் முன்னே வருணித்துச் சொல்லிய மலைய நாட்டில் வந்து கொண்டிருந்தான். இவனுக்குப் பதினெட்டு வயது இருக்கலாம். இவன் பார்வைக்கு நல்ல தோற்றம் உடையனாயும் இருந்தான் இவன் விழிகளிற் காணப்படுகின்ற ஒருவகையான சுறுசுறுப்பு, இவன் உருவமெங்கும் கள்ளத் தன்மையுடையதோர் தோற்றத்தை விளை வித்துத் திடுக்கிடச் செய்தலால் இவனை அழகுடையவன் என்று சொல்லக்கூட வில்லை. மற்று, இவன் உறுப்புகள் மிகச் செவ்வையான அமைப்புடையனவாய் இருந்தன. சிலவேளைகளில் இவன் கண்ணின் தோற்றத்தை நோக்குகின்றவர்க்கு இவன் வைரம், வஞ்சங், கொடுமை முதலான தீய குணங்களு டையவன் போல் கடுமையாய்த் தோன்றும். ஆயினும், மலை நாட்டில் வாழ்கின்ற வர்க்கு இத்தகைய பார்வை பொதுவாக இருத்தலால், இது கொண்டே அவர் குணங்களை அளந்தறிதல் ஒரு சிறிதும் பொருந்தாது. இங்ஙனம் நாம் வருணிக்கின்ற இவ்விளைஞனுடைய உடம்பின் சாயல் பெண்களுக்கு இருப்பது போல் தெளிவாய்த் திகழ்ந்தது; ஆயினும் மகளிர்க்கு உள்ள மென்மையில்லை; அவன் கன்னங்களில் கடற்சிப்பியிற்போற் சிவந்த வண்ணத் தோய்ச்சல் இல்லையாயினும் இளம் பருவத்திற்கு உரிய சிவந்த நிறஞ் செழுமையாய் இருந்தது, மோவாயில் மயிர் இல்லை, மீசைமயிர் தலைமயிரை விட மிகக் கறுகறுத்து அரும்பியிருந்தது, தலை மயிர் பழுப்பு நிறமாய்ப் பட்டுப் போல் வழுவழுப்பாய் இருந்தது; இம்மயிரைப் பிடரிவரையில் நறுக்கித் தொங்க விட்டுத் தலையிற் பொற்சரிகை விளிம்புகோத்த சிறுபாகை சூடியிருந் தான், உடம்பினோடு ஒட்டி இறுகப் பிடித்திருக்கும் காற் சட்டை, கைச்சட்டை யிட்டிருப்பதனால் பூங்கொம்பு போல் ஒடிந்துவிழும் இயல்பினையுடைய அவன் உடம்பின் அங்கங்கள் திருத்தமான அழகுடன் பொருத்தமுற்றிருத்தல் நன்கு தோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/41&oldid=1581295" இலிருந்து மீள்விக்கப்பட்டது