உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

11

காண்பது அரிது. அத்தனித்த மலைத் தொடர் பாகங்களில் மலைகள் ஒன்றன் மேலொன்றாய் உயர்ந்தும், குன்றுகள் மேற் குன்றுகள் செறிந்தும், உயரத்தின் மேல் உயரமாய்க் கற்பாறை களும், அச்சம் வாய்ந்த செங்குத்தான கொடிகளும் இருண்ட வழி களும், அருவி விழுந்து குடைந்த பெரும் பள்ளங்களும், பனிப் பாறைகளும் நிறைந்தும் ஒருங்குபட்டுத் தோன்றும் மிக உன்னதத் தோற்றமானது மிக உயர்ச்சியுடையதாயும், கண்டார்க்கு உள்ள மேம்பாட்டை விளைவிக்கும் பெருந்தகைமை யுடையதாயும் இருக்கின்றது. ஆ! இங்ஙனம் நாம் வருணித்துக் கூறிய அடிவாரத் தினையும் வியக்கற்பாலதாம் அவ்வுன்னத மலைத் தொடரி னையும் மேற்குவிந்துள்ள வானம் மேகமின்றி நீலநிறஞ் சிறந்து தெளிவுடையதாய் விரிந்து எவ்வளவு பரிசுத்தமாய் விளங்கு

கின்றது!

கொச்சிமுதலான தென்னாடுகளிலிருந்து மேற்பக்கமாய் வடதேசஞ் செல்லுவோர் தம் இடக்கைப்புறத்தில் விரிந்து கிடக்கும் இம் மலையநாடு இங்ஙனம் பேரழகுடையதாய்ச் சிறந்து விளங்குதல் கண்டு கொள்க. நீலகிரி மலைச்சாரலிலுள்ள இம்மலைநாடு சேர வமிசத்தார்க்கு உரிமையுடையதாயினும் அக்காலத்தில் அரசாண்ட நரசிங்கவரும சோழன் என்னும் வேந்தர்வேந்தன் சாளுக்கிய நாட்டு அரசர் முதலாயினாரைப் புறங்கண்டு பேராற்றலுடையனாய் விளங்கினமையால், மற்றைத் தமிழ்நாட்டு வேந்தரான சேர பாண்டியர் இவனோடு எதிர்க்க அஞ்சி அமைந்திருப்ப மலைநாட்டுக் கோடியிலுள்ள நீலகிரி மலைச்சாரல் அதனை யடுத்துள்ள சோழ நாட்டோடு ஒருங்கு சேர்ந்து சோழ வமிசத்தார்க்கு உரியது போல் தோன்றிற்று. நரசிங்கவரும சோழனும் அந்நாடு தனக்கு உரிமை யுடைய தன்றாதல் நன்குஉணர்ந்து அதனை முற்றுந் தன்வயப்படுத்த நினையாமல் தன்படையில் ஒரு பாகத்தை அங்கு நிலைப்பித்து அங்கு நடத்தப்படும் வாணிகம் செவ்வையாக நடைபெறும் பொ ருட்டு அதனைக் காப்பது போல் அவிநயித்துவந்தான். அந்நீலகிரி நாட்டில் உள்ளோரும் 'வேற்றரசன் ஒருவனுக்கு நாம் அடங்கி ஒழுகக் கடமைப்பட்டுள்ளோம்' என்பதை நினை யாமல், தாம் விரும்பியவாறு தம்முடைய சிற்றரசன் கீழ் இனிது காலங்கழித்து வந்தார்கள். இம் மலைய நாட்டிலுள்ள மக்கள் அழகாய் இருப்பர், ஆண்மக்கள் எல்லாரும் நீண்டுயர்ந்து ஒடிந்து விழுவது போன்ற அழகிய உடம்பும் பார்வைக்கு நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/40&oldid=1581294" இலிருந்து மீள்விக்கப்பட்டது