உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் 13

தினும் பெருவிளைச்சலாயிருந்தலால் அவ்விடங்களில் இருக்கும் ஏழைக் குடித்தனகாரரும் அப்பழங்களை ஒரு பொருட் படுத்துவதில்லை. .இவையேயன்றிப் பறங்கிப்பழம், பூசனிப் பழங் கும்பு கும்பாய்ப் பழுத்துத் தொங்கும் கொல்லைகளைக் காண்பவர் இவை இயற்கையிலேயே இவ்வாறு கொழுமையாய் விளைந் திருக்கின்றன என்று அறியாமல் குடிகளால் நன்றாகத் திருத்திப் பயிரிடப்பட்டன வென்றே நினைப்பர். இக்கொல்லை களைச் சூழ்ந்து வேலி போலிருக்கும் புதர்களின் மேற் சிவக்கப் பழுத்த கொழுங்கனிகளுடைய கொவ்வைக் கொடிகளும், குன்றிமணிக் கொடிகளும் படர்ந்திருக்கின்றன. மரப்பொந்துகள் தோறும் மலைவெடிப்புகள் தோறுந் தேனீக்கள் பலமலர் களினின்றுந் திரட்டித் தொகுத்த தித்திப்பான தேன் அடைகள் நிரம்பி யிருக்கின்றன.

இனி இங்கேயுள்ள காடுகளின் பக்கத்தில் காட்டுத் தாராக்கள் தலையை அசைத்து அசைத்துச் செல்வது காணலாம்; அரவம் அடங்கியுள்ள அவ்விடத்தில் பறவைத் தொகுதிகள் பறக்கும் போது உண்டாகும் இறக்கையின் ஓசைதான் ஒவ்வொருசமயங் கேட்கப்படும். நீர் ஓடைகளில் கரிய அன்னப்பறவைகளும் வெளிய அன்னப்பறவைகளும் மொழு மொழுவென்று ஓடும் நீரில் சறுவலாய் மிதந்து செல்கின்றன; வரகங்கொல்லைகளில் மடப்பமான புள்ளி மான்களும் கலைமான்களும் மிகவும் விரைவாய்த் துள்ளித் துள்ளிக் களிப்பாய் ஓடுகின்றன; யாரும் வருத்துவார் இன்மையால் முயல்கள் கூட்டங் கூட்டமாய்ப் புல்நிலங்களில் அச்சமின்றி மேய்ந்து திரிகின்றன; சிலவேளைகளில் இரு மருங்கும் பழுத்த மரங்கள் வரிசையாய் அமைந்த காட்டு நெறியை மெதுவாய்க் கடந்து செல்கின்றன. சிலவேளைகளில் மிகவும் பருமனான கழுகு இங்குமங்கும் பறந்து போவது காணலாம்; ஆயினும் அவை அருகாமையில் உள்ள மலை உச்சிகளில் தாம் கூடுகட்டி வசிக்கின்றன. அம்மலைகளின் கரிய முழைஞ்சுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான அருவிகள் உண்டாகிக் கீழ் அடிவாரத் திலுள்ள நிலத்திற் பாய்ந்து அதனை வளம்படுத்துகின்றன.

இங்ஙனம் அடிவாரத்திலுள்ள வளப்பமான நிலமும், அதனை அடுத்து உயர்ந்த மலைத்தொடரும் தம்மில் இருவேறு வகைப்பட்டஇயற்கையுடையனவாய் விளங்குதலை வேறெங் குங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/39&oldid=1581293" இலிருந்து மீள்விக்கப்பட்டது