உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

33

சிறந்து விளங்கினதைப்போலவே, இன்னுங் கடுமையான போர்முகங் களிலெல்லாம் அங்ஙனமே மறஞ்சிறந்து திகழ்ந்தனன், இவனிடத்துப் பொறுமையும் தயாளகுணமுங்

குடி

காண்டிருந்தன; இன்னும் அவன் ஒழுக்கங்களினெல்லாம் ஆண்டன்மையோடு கூடிய ஒரு பெருந்தன்மை சிறந்து காட்டுவதாயிற்று. அச்சம் என்பதனை இவன் அறியவே மாட்டான். அபாயம் என்கின்ற சொல்லைக் கேட்பினும் நகையாடுவான். இவ்வியல் பினனாயினும், ஒரு பிராணி வருந்துதலைக் காணினும் பிறசீவர் துன்புறுதலைக் கேட்பினும் இவன் கண்களில் நீர் முத்து முத்தாய்த் துளிக்கும்

பதுமை

இவனுக்கு இப்போது வயது இருபத்தொன்று, இவனுடம்பு உயர்ந்த பூங்கொம்புபோல் மெல்லியதாயும், திருந்திய அமைப்புடையதாயும் மதனவேள் போலக் கைகால் முதலான உறுப்புக்கள் நீளமாயும் துவண்டன. வழுவழுப்பான வெள்ளைச் சலவைக்கல்லில் இவன் உடம்பின் அங்கங்களை நன் மாதிரியாக வைத்து உளியாற் செதுக்கி இழைத்து ஒரு அமைக்கப்படுமாயின் அது வழுவற்ற ஆண்டன்மையினைக் குறிக்கும் வடிவமாய்ப் பிரசித்தி யடையுமென்பது திண்ண மேயாம். ஆகவே அவன் அங்கங்களின் அமைப்பின் அழகை யாம் எங்ஙனம் வருணிக்க மாட்டுவேம்! அவன் நெற்றி அகன்று அமைந்து கிடந்தது; தடிப்பின்றி மிக முரிந்து வளைந்த இவனுடைய புருவங்கள் மிகவும் கரியவாய் ய இருந்தன; கண்ணிறைப்பை செவ்வையாகத் திறந்திருந்தன; விழிகள் பருமனாய் இமைகளிற் பெண்களுக் கிருப்பதுபோற் கருகி யடர்ந்த மயிர்வரிசையும் இருந்தன; தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துதல், செருக்கடைதல், தறுகண்மை முதலான தீயகுணங்கள் இவனிடத்து ஒருசிறிதும் இல்லை. ஆயினும் ஆண்டன்மையும் போர்முகத்து அஞ்சாமையும் என்கின்ற உயர்குணங்கள் வாய்க்கப்பெற்ற இளைஞர்க்குத் தம்உயர்வு தாமேயறியும் ஓர் உணர்ச்சி இயற்கையாக உண்டாதல்போல இவனிடத்தும் இப்பெற்றிப் பட்டதோர் உணர்ச்சி தோன்றுதல் உண்டு. இவன் கன்னமீசை வைத்திராவிடினும், மேல் இதழில் உள்ள கரியமீசையும், எலுமிச்சம்பழத்தைவிடச் சிறிது பழுப்பாகத் தோன்றும் மேனியின் நிறமும், எதற்கும் அஞ்சாத கண்கள் நோக்கமும் இவன் முகத்தில் ஓர் ஆண்டன்மை விளங்கத் தோற்றுவித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/62&oldid=1581317" இலிருந்து மீள்விக்கப்பட்டது