உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

73

இவ்வளவு ஆயாசம். இதனால் இப்போதொன்றும் அபாய மில்லை. இன்னும் இரண்டு மணி நேரத்தில் குணம் அடைந்து விழிப்பார். ஆனாலும், இவ்வதிர்ச்சியினால் உண்டான நோய் தீர இன்னும் ஒருமாதம் ஆகும். இவருடைய இரத்தத்தைப் பரிசோதித்து முடிவு தெரிவிக்கிறேனென்று சொல்லிக் கையில் ஓர் ஊசியைக்குத்தி அங்குவந்த ஒரு துளியிரத்தத்தை இரண்டு கண்ணாடித் துண்டுகளின் இடையே வைத்துக்கொண்டு போகும் பொழுது ஒரு சீட்டில் சில மருந்துகளைக்குறித்து அவற்றை வாங்கிக் கொடுக்கும்படி கற்பித்துத் தாம் மறுநாட்காலையில் திரும்ப வந்து பார்ப்பதாக மொழிந்து போனார்.

.

வெளியேபோயிருந்த

என்

அவ்வாங்கிலவைத்தியர் போனதும் அப்பாரசிககனவான் தெரிவித்தபடி தாழ்வாரத்தின் பக்கத்திலிருந்த ஓர் அறையில் கட்டில் இட்டு அதன்மேற் படுக்கைவிரித்துச் சித்தஞ்செய்ய வேண்டியவர்களானோம். இதற்குள் அப்பாரசிககனவான் தமது வண்டிக்காரனைக் கூப்பிட்டு அவன் கையில் அந்தச்சீட்டையும் தமது பணத்தையுங் கொடுத்து மருந்து வாங்கி வரும்படி ஓர் ஆங்கிலமருந்துக்கடைக்கு அவனை அனுப்பினார். இதற்குள் மாலையில் மணி ஆறாயிற்று. மைத்துனன் இராமசாமி அப்போதுதான் வீட்டுக்குள் வந்தான். இவன் கொஞ்சம் தலையரட்டையுடையவன் ஆகையால், இவனிடத்தில் யான் நெருங்குவதுமில்லை, மிகுதியாய்ப் பேசுவது மில்லை. ஆனால் தன் தந்தையினிடத்திற் பிரியமும் அச்சமும் உள்ளவன்; தன்னின் மேலோராயிருப்பவர்க்கு மட்டும் அச்சத்தினால் மரியாதை செய்பவன். இவன் இரண்டாங் கட்டுக்குள் வந்ததும், தன் தந்தையார் கீழே களைத்துக்கிடக்க நாங்கள் எல்லாரும் அவர் பக்கத்தே பரபரப்பாயிருக்கப் பார்த்தான். கம்பீரமான தோற்றம் உள்ள தோற்றம் உள்ள அப்பாரசிக கனவானையும் தேவமாதரைப் போன்ற அவர்தம் மனைவி யாரையும் பார்த்ததும் அச்சமும் பணிவும் அடைந்தவனாகி உடனே அவர்களுக்கு வணக்கவுரை கூறினான். அவன் கூறிய வணக்கவுரைகளை ஏற்றுக் கொண்டு அவ்விருவரும் அவனுக்கு நல்லுரைசொன்னாராயினும், அவனது தோற்றத்தைக் கண்டு அவன் மேற்சிறிது அருவருப்புங் கொள்ளலானார் என்பதை அவர்கள் முகக் குறிப்பினால் கண்டு கொண்டேன். அவன் மரியாதையுடையவன் போல ஒடுக்கத் தோடும் என்பக்கத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/102&oldid=1582060" இலிருந்து மீள்விக்கப்பட்டது