உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் -14

நிலைமையிலுங் கூட அப்பெண் பேய்கள் இரண்டும் வயதில் முதிர்ந்த என் மாமனார் அருகில் வராமல் இரக்கமும் அன்பும் இன்றித் தூரத்தே நின்று கொண்டு இகழ்ந்து பேசுவதும் என்னுள்ளத்திற் புகுந்து, நாற்புறத்தும் வேடர்களால் ஏவப்படும் கூரிய அம்புகள் தைக்க நிலைகலங்கி வருந்தும் மான்கன்றைபோல் யான் பெரிதும் நோவும் படி செய்தன! சற்று நேரத்திற்கு முன் அருமையிற் சிறந்த அப்பாரசிக குடும்பத்தாரை விருந்தேற்று உபசரித்த போது யானடைந்த மகிழ்ச்சியெல்லாம் எங்கேயோ பறந்து போயின! நல்லோருடைய சேர்க்கையால் எவ்வளவு நலங்களை அடைந்தோமாயினும், தீயோர் சேர்க்கையும் உடனிருக்குமாயின் அதனால் அந்நலங் களெல்லாம் சிதறுண்டு போகும் என்றும் அதனால் அளவுபடாத துன்பமே விளையு மென்றும் எண்ணி என் நெஞ்சம் உருகவே என் கண்களில் நீர் துளித்தது; அப்பாரசிக அம்மையார் என்னைக் கண்டு மனம் மிகக்கசிந்தவராகி அம்மா, சிறிதும் வருந்தாதே. உன் மாமனாருக்கு ஏதும் அபாயமில்லை" என்று தேறுதல் சொல்லி எனது முகத்தைத் தமது பட்டாடையால் துடைத்தனர். இப்படிப்பட்ட பேரிடரான சமயத்திலும் கந்தருவமாதைப் போல் என் பக்கத்தேயிருந்து கொண்டு அன்னையிலும் அருளுடை யராய் எனக்கு ஆறுதல் சொல்லுதற்கும் உரியவர் ஒருவர் இருக்கின்றார் என்பதனை அறியவே என் உள்ளம் ஒருவாறு ஆறுதலெய்திற்று.

66

இதற்குள் அப்பாரசிககனவான் தக்க ஓர் ஆங்கில வைத்தியரை அழைத்துவந்தார். அவர் வரவே நாங்கள் என் மாமனார் தலையை தலையை மெல்லென ஒருதலையணை மேற் சார்த்திவிட்டு, எழுந்து அப்பாற் சிறிது விலகிநின்றோம். உடனே வந்த அவ்வாங்கில கனவான் சுருசுருப்பாகவும் நிதானமாகவும் என் மாமனார் மார்பையும் கை நாடியையும் முதுகையும் கண்களையும் நாவையும் பரிசோதித்துப் பார்த்து ஆங்கிலத்தில் உள்ள நிலைமையைச் சொல்ல அப்பாரசிக கனவான் அதனை தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். அவர் சொன்னதன் கருத்து இது; சடுதியில் உண்டான பெருங் கோபத்தினாலும் துயரத்தனாலும் விளைந்த மன அதிர்ச்சியினால் இந்தக்களைப்பு நேர்ந்திருக்கிறது. இளம்பருவம் உள்ளவர்க்காயின் ஈது இவ்வளவு களைப்பினை வருவித்திராது. முதிர்ந்த வயதினாரா யிருப்பதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/101&oldid=1582059" இலிருந்து மீள்விக்கப்பட்டது