உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

71

அத்தனை பெருந்துன்பத்தை அடைந்தார்; இத்துன்பத்தினால் மிகவும் களைப்புடையவராகிக் கீழே உட்கார்ந்து அப்படியே நிலத்தின் மேற் சாய்ந்துவிட்டார். இதனைப்பார்த்தயானும் அப்பாரசிகப் பெருமாட்டியாரும் அளவிறந்த அச்சமும் கவலையும் வருத்தமும் உடையவர்களாகிச் சிறிது மலைத்து நின்றோம்; அதன்பின் ஒருநொடிக்குள் அவ்வம்மையார் என் மாமனாரைத் தூக்கித் தமது மடிமேல் வைத்துக் கொண்டு, என்னை அஞ்ச வேண்டாமென்று தேறுதல் சொல்லி, ஓர் ஏனத்தில் சிறிது குளிர்ந்தநீர் கொண்டுவரும்படிஏவ, யானும் சமையற்கட்டுக்குள் விரைந்தோடி அதனை எடுத்து வந்தேன்; அக்குளிர்ந்தநீரை மாமனார் முகத்தின் மேற்றெளித்து விசிறி கொண்டுவீசிக் களைப்பாற்றிக் கொண்டிருந்தோம். இதற்குள் அவர்களின் மூத்தபெண் எங்கள் மெத்தைமேற்போய்த் தன்றந்தையாரான அப்பாரசிக கனவானை அழைத்து ஓடிவந்தது. அவர் என் மாமனார் களைத்துக்கிடப்பதையும் நாங்கள் காப்பாற்றிக் கொண்டிருப்பதையும் பார்த்துத் திகைப்படைந்து பதறிக்கிட்டவந்து முதலில் அவரது மார்பையும் பிறகு அவரது கையையும் தொட்டுப் பார்த்தார்; பார்த்து நாடி நிரம்பவும் மெதுவாக நடக்கின்றதென்று சொல்லித் தாம் விரைவில் ஒருவைத்தியரை அழைத்துவரப் போனார். பெரும்பாவிகளான என் மாமியாரும் நாத்துணாரும் தங்கணவரும் தந்தையுமாகிய என் மாமனார் இங்ஙனம் அபாயகரமான நிலைமையிற் கிடப்பதைப்பார்த்தும், கிட்ட வந்தார்களில்லை; தூரத்தில் நின்றுகொண்டே,“கிழப்படுவானுக்கு வேணும், அந்தமுண்டைச்சி துலுக்கச்சியை வீட்டுக்குள்ளே அழைத்து வந்ததை நாம் கண்டிக்கையில் இந்தக்கிழப்பயல் அவளுக்காக நம்மைக் கொல்லவந்தானே. துலுக்கச்சி வீட்டுக்குள்ளே வந்ததைப் பொறுக்காமல் நம்ம வீட்டுத் தெய்வம் அவனைக் கீழே அடித்துப் போட்டுவிட்டது.போறான், கிட்டப் போய்த் தூக்கி யெடுக்கலா மென்றால் துலுக்கச்சி பக்கத்தில் இருக்கிறாளே” என்று மெதுவான குரலில் என் காதில் விழும்படி பேசினார்கள். இவர்களின் கொடுஞ்செயலும், புதிதுவந்த அவ்வுயர் குணப் பாரசிகமாதர் அவர்களால் இகழப்பட்டதும், அருமையிற் சிறந்த என் மாமனார் சிறிது நேரத்தில் அபாயகரமான நிலையை அடைந்திருப்பதும், அப்பாரசிககனவான் இதனால் வருத்தம் மிக எய்தி வைத்தியரை அழைக்கப்போனதும், அபாயமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/100&oldid=1582058" இலிருந்து மீள்விக்கப்பட்டது