உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் -14

பார்த்தவுடனே அப்பாரசிக அம்மையார் திடுக்கிட்டு நின்றார். இவர்கள் யார்?' என்று கேட்கும்பொருட்டு அவ்வம்மையார் என் முகமாகத் திரும்புதற்குள் என் மாமி கடுகடுத்த முகத்தோடு “நீ யாரம்மா?' இங்கே வருகிறே. உன்னைப்பார்த்தால் துலுக்கச்சி யாட்டமா இருக்கு. இது பிராமணாள் ஆம் என்று நோக்குத் தெரியாதோ? எட்டிநில்” என்று கொடுமையாப் பேசி விட்டுப் பிறகுடனே என்னைப்பார்த்து, “ஏண்டி கெட்டமுண்டே, நோக்குத்தான் துலுக்கச்சி கிறிஸ்துவச்சி பாப்பாத்தி எல்லாம் ஒண்ணாச்சே! இந்தத்துலக்கச்சியை ஏண்டி சமையல்கட்டு வரையில் அழைத்துக்கொண்டுவந்தே! அறிவு கெட்டவளே!' என்று என்னை வைதுபேசினாள். நான் அவ்விருவருக்கும் விடைசொல்ல வாயெடுக்கும் முன்னமே, அப்பாரசிகப் பெருமாட்டியார் என்னை அவள் திட்டுவதைப் பார்த்து மனம் பதைபதைத்து அவளை நோக்கி “ஏன் அம்மா அந்தக் குழந்தையை வீணாகத் திட்டுகிறீர்கள்? நான் துலுக்கச்சி அல்லேன். நாங்கள் பாரசிககாரர், இந்துக்கள் தாம்.நான் உங்கள் சமையல் கட்டுக்குள் வரமாட்டேன். அதற்காகப் பயப் படாதீர்கள் சும்மா, வீட்டைப் பார்க்கவந்தேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்” என்று மிகவும் பொறுமையாக இனியகுரலிற் சொன்னார். அவ்வம்மையின் உருவத்தையும், அவர் சொல்லின அமைதியையும்கண்டு கேட்பவர் மனம் கல்லாயிருந்தாலும் கரையும்; கல்லினும் வல்லென்னும் நெஞ்சம் உள்ள இப்பெண் பேய்களுக்கோ சிறிதும் மனம் இரங்கவில்லை. உடனே அவர்கள் பின்னுங்கடுமையாய் “நீ பார்சிக்காரியாயிருந்தாலென்ன; வேறு யாராயிருந்தால் எங்களுக்கென்ன? நீ இந்த இடத்திற்குள் கால் வைக்கவேகூடாது. அப்பாலேபோ. இங்கேயொன்றும் பேசாதே” என்று உரத்துக் கூவினார்கள். இந்தக்கூச்சல் காதில் விழுந்த தனாலேயாக்கும் உடனே என் மாமனார் மெத்தை மேலிருந்து கீழே எங்களிடம் கடுகிவந்தார். இவரைக்கண்டதும் அப்பேய்களிரண்டும் வாய் பேசாது அப்புறம் ஒழிந்தன. எனக்குண்டான வருத்தத்திற்கோ அளவில்லை; புதிதாக அன்புடன் வந்த அப்பாரசிக

அம்மையாரை அவர்கள் அவ்வளவு தாழ்வாகப்பேசியது என் உள்ளத்தில் வாள்இட்டு அறுப்பதுபோலாயிற்று. என் மாமனார் எங்கள் அருகில் வந்ததும் சிறிதுநேரத்தில் நிகழ்ந்தவற்றை யெல்லாம் விரிவாகச் சொன்னேன். இதனைக்கேட்டதும் இந்த நிலவுலகத்தில் தாம் பிறவியெடுத்தது முதல் அடைந்திராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/99&oldid=1582057" இலிருந்து மீள்விக்கப்பட்டது