உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

69

நூல் உலகத்தில் எந்தப் பாஷையிலும் இல்லையென்று உறுதியாகச் சொல்லலாம் என்று குழைவாகவும் சுருக்கமாகவும் எடுத்துச் சொன்னார்.

இவைகளைக் கேட்ட அந்தப் பாரசிககனவானும் அவர்தம் மனைவியாரும் அவ்வடியார்களின் சிறப்புகளை மிக வியந்து பாராட்டினார்கள். அப்பாரசிககனவான் தமிழின் இனிமையும் அதிலுள்ள நூல்களின் அருமையும் நன்கு தெரியப்பெற்றவராகித் தாம் அப்பாஷையினை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டு மென்னும் தமது மனவுறுதியைத் தெரிவித்தார். இந்தச் சம்பாஷணை முடிந்ததும் என் மாமனார் தாம் படிக்கும் புத்தகசாலைக்கு அக்கனவானை அழைத்தனர்; ஆங்கில பாஷையில் நிரம்பக் கற்றவராகையால் என் மாமனார் பல்லாயிரம் உயர்ந்த ஆங்கிலப் புத்தகங்கள் தொகுத்துச் செவ்வையாக ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். அவற்றைப் பார்ப்பதற்காக அக்கனவான் மாமனாரோடும் புத்தக சாலைக்குச் சென்றார். அவர்தம் மனைவியார்க்கும் எனக்கும் ஆங்கில பாஷை தெரியாதாகையால் நாங்கள் கூடச் செல்லவில்லை. அவ்வம்மை இவ்வீட்டின் மேலும் கீழுமெல்லாம் பார்க்கவேண்டு மென்னும் குறிப்பைப் புலப்படுத்தினதால் யான் அவர்களை அழைத்துக் கொண்டு மெத்தை மேல் உள்ள இ ங்களை யெல்லாங் காட்டிப் பின் கீழ்ச் சென்றேன். இந்தவீடு மூன்று கட்டுகளாக அமைக்கப்பட்டிருந்தது. முதற்கட்டு வருவோருடன் பேசுவதற்கும், நடுக்கட்டு வீட்டிலுள்ள ஆண்மக்கள் புழுங்கு வதற்கும் தங்கள் நித்தியகர்மங்களைச் செய்து கொள்வதற்கும், கடைசிக் கட்டுப் பெண்பிள்ளைகள் இருப்பதற்கும் சமையல் முதலியன செய்வதற்கும் உபயோகமாம்படி வசதியாக அமைக்கப் பட்டிருந்தன. ஆங்காங்குள்ள தட்டுமுட்டுகளும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன. இவற்றையெல்லாம் அப்பெருமாட்டியார் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு சமையல்கட்டுவரையில் சென்றார்.மூத்தபெண் கைக்குழந்தையைக் கையில் இடுக்கிக் கொண்டு தாயோடு கூடவே வந்தனள். மற்ற மூன்று பிள்ளைகளும் மெத்தைமேலே புத்தகசாலைக்குள் தம் தந்தையாரோடுகூட இருந்தனர். சமையற்கட்டண்டை நாங்கள் வருவதைப் பார்த்ததும், என் மாமியாரும் நாத்துணாரும் புலி பாய்வதைப் போலச் சரேலென்று எங்கள் எதிரேவந்தனர். சிணுங்கின அவர்கள் முகத்தையும் அவர்கள் வந்த விரைவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/98&oldid=1582056" இலிருந்து மீள்விக்கப்பட்டது