உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் -14

இந்தச்சுவாமிகள் ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர்; இந்தக் காலத்திலுள்ள இந்துக்களிற் சிலர் கிறிஸ்துமதத்திற்குப் போவது போல, இவரும் சைவசமயத்திற் பிறந்தவராயிருந்தும் அக்காலத்திலிருந்த ஜைன மதத்திற்குப் போயிருந்தார்; பிறகு இவருக்குக் கொடுமையான வயிற்று நோய்வந்தது; எந்தவிதமான பரிகாரத்தினாலும் அது நீங்காமல் பரமசிவத்தைப் பாடியபிறகு நீங்கிற்று; அதுமுதல் இவர் மறுபடியும் சிவபக்தரானார்; இதையுணர்ந்த ஜைனர்கள் இவரைச் சுண்ணாம்புக்காளவாயில் நுழைத்தும், கருங்கல்லிற் கட்டிக் கடலில் வீழ்த்தியும், யானைக்காலில் இடற முயன்றும், விஷத்தை உண்ணக் கொடுத்தும் பலவழியில் துன்புறுத்தி னார்கள்; ஈச்வரகிருபையால் இவர் அவற்றிற்கெல்லாம் தப்பிப் பிழைத்து, அநேக சிவாலயங்களை தரிசித்துக் குழந்தைப் பருவத்திலேயே ஈசுவரனால் பாலூட்டப் பட்டு ஞான மூர்த்தியான திருஞானசம்பந்தப் பெருமானுடைய நேசத்தைப் பெற்று உலகத்திற்குப் பல பேர் உபகாரங்களைச் செய்து சிவத்தின் திருவடியை அடைந்தார்; அவர் அவ்வப்போது ஈசுவரனை ஸ்துதித்த அருமையான செந்தமிழ்ப் பாடல்களுக்கு ‘தேவாரம்' என்று பெயர்.

“இந்தம்மாள் இரண்டாவது பாடினபாட்டுத்திருவாசகத்தில் உள்ளது; அதனைப்பாடினவர் மாணிக்கவாசகசுவாமிகள். இவர் ஆயிரத்து அறநூறு வருஷங்களுக்கு முன் பாண்டிய ராஜனிடத்தில் மந்திரியாயிருந்தவர். இவர் இளம்பருவத்திலேயே ஞானத்தை அடையும் விருப்பம் உடையவராயிருந்தார். பாண்டியன் குதிரை வாங்கி வரும்படி இவரை அனுப்ப, இவரும் அப்படியே திருப் பெருந்துறை என்னும் இடத்திற்குசென்று, அங்கே குதிரைகளுக்குப் பதிலாக ஞானகுருவைத் தரிசித்து, அவரால் தாம் பலநாளாய் அடையவிரும்பின பரமஞானத்தை அடைந்து அரசன் தந்த பொருளையெல்லாம் குருவிற்கே அர்ப்பணம் பண்ணி, அதனாற் பல துன்பங்களையடைந்து, கடைசியாகப் பரமசிவகிருபையால் அத்துன்பங்களினின்றும்

விலகி,லங்காதேசத்திலிருந்து வந்த புத்தர்களோடு வாதஞ்செய்து அவர்களை ஜெயித்துத் திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் உயர்ந்த நுல்களை அருளிச் செய்து சிவஜோதியிற் கலந்தார். இவர் திருவாய் மலர்ந்தருளின திருவாசகத்தைப் படித்து மனம் உருகாதவர் இல்லை. இதை ஒத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/97&oldid=1582055" இலிருந்து மீள்விக்கப்பட்டது