உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

67

தேவார திருவாசகங்களிடத்தும் அவற்றை அருளிச் செய்த ஆசாரிய சுவாமிகளிடத்தும் இயற்கையிலேயே மிக்க அன்பு பூண்டொழுகும் என் மாமனார் அப்பாரசிக கனவானின் மன நிலையைப் பார்த்து மேலும் மனக்கிளர்ச்சி யுடையவராகி, அருமையுள்ள ஐயா, எங்கள் தமிழ்ப்பாஷை தெய்வத்தன்மை யுடையதாகும். நமது ஸமஸ் கிருதபாஷையும் வேதவேதாந்தங்கள் முதலான பெரிய சாஸ்திரங்களையுடைய தெய்வீகபாஷை யாயிருந் தாலும் அதைவிடத் தமிழ்ப் பாஷையே பலவகையாலும் உயர்ந்ததும் இனியதும் என்பது என் கருத்து. தாங்கள் இப்போது கருத்து.தாங்கள் குறிப்பிட்டபடி உச்சரிப்பவர்களுக்குப் பிரயாசையினையும் கேட்பவர்களுக்குப் பயத்தையும் அருவருப்பையும் உண்டாக்கும் கடினசப்தங்களும் சீறுகிற ஓசைகளும் ஸமஸ்கிருதத்தில் இருப்பது போல எங்கள் செந்தமிழ்மொழியில் இருப்பதில்லை. தேனும் பலாச்சுளையும் மாம்பழமும் வாழைக்கனியும் சேர்த்துப்பிழிந்த தீஞ்சாறு ஒழுகினாற் போல அத்தனை இனிப்பான மெல்லிய ஒலிகளே எங்கள் செந்தமிழில் இருக்கின்றன” என்று சொல்லும் போதே அப்பாரசிக கனவான் இடையில்,

66

"ஆ! ஆ! பேஷ்! ஐயா, தாங்க இப்போ சொன்ன வார்த்தைகளே தேன்போல தித்திக்குதே! இப்போ சொன்ன வாக்யத்தெ திருப்பிச் சொல்லுங்கோ!” என்று தன்னைமறந்த மகிழ்ச்சியோடு வினாவினார்.

அதற்கு இணங்கிய மாமனார், “நல்லது ஐயா, தேனும்பலாச் சுளையும் மாம்பழமும் வாழைக்கனியும் சேர்த்துப்பிழிந்த தீஞ்சாறு ஒழுகினாற்போல அத்தனை இனிப்பான மெல்லிய ஒலிகளே எங்கள் செந்தமிழில் இருக்கின்றன. இந்தப்பாஷையில் உரத்த சப்தங்களும் கோபம் வருத்தம் வந்தகாலங்களிற் பிறக்கும் ஹஸ முதலான சப்தங்களும் இல்லாமையினாலே இந்தப் பாஷையில் எழுதப்பட்ட நூல்களைக் கற்பவர்க்கு மன அமைதியும் தெய்வ பக்தியும் எல்லா உயிர்களிடத்து அன்பும் தாமாகவே வருகின்றன. நம் இந்து சமயப் பிரிவுகளான சைவ வைஷ்ணவ சமயங்களிலிருந்த பெரிய பெரிய பக்தர்களெல்லாம் ஸமஸ்கிருதத்தில் வல்லவர் களாயிருந்தும் செந்தமிழிலேயே பாட்டுக்கள் பாடித் தெய்வத்தை ஸ்துதித்தார்கள். இந்த அம்மாள் முதலிற்பாடின பாட்டு அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/96&oldid=1582054" இலிருந்து மீள்விக்கப்பட்டது