உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் -14

“மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும்பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்றபோது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேனவர்திருப் பாதங் கண்டறியாதன கண்டேன்'

என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரத்தைக் கால்மணிநேரம் வரையில் என் மனம் உருகப் பாடினேன்.

இதனைக்கேட்டு மிகவும் மனங்கரையப்பெற்ற அப்பாரசிக கனவானும் அவர் மனைவியாரும் அப்பாட்டின் உருக்கத்தையும் தமிழின் இனிமையையும் எனது குரலின் குளிர்ந்த ஒலியினையும் பாடுந்திறமையினையும் மிகவியந்து மகிழ்ந்து பேசினார்கள். பின்னும் அவர்கள் இதே வகையான மற்றொருபாட்டுப் பாடும்படி கேட்டுக்கொள்ளவே என் மாமனார் மாணிக்க திருவாசகத்தில் ஒன்று

வாசகசுவாமிகள்

பாடும்படி சொன்னார்கள். மறுபடியும் யான் வீணையின் நரம்புகளைத் தெறித்து,

“முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே

என்னும் திருவாசகத்தைப் பாடினேன்; இதனை யான் மடித்து மடித்துப் பாடுகையில் பெரியவர்களான அம்மூவர் கண்களிலும் நீர் முத்துமுத்தாய்த் துளித்தன. யான் பாட்டை நிறுத்தினவுடனே அப்பாரசிககனவான் என் மாமனாரை நோக்கிப்

"பெரியய்யா உங்கதமிள்பாஷை கடினசப்தங்களும் ஸ்ஷ் முதலான சீறுற சப்தங்களும் இல்லாமே ஆ! எம்மாத்தம் இனிப்பா இருக்குது! அதிலும் இந்தப்பாட்டெ பாடினவர் ரொம்ப ரொம்பப் பெரியவங்களா இருக்கணும்! இதெப்பாடினவர் எப்போ இருந்தார்? அவரெப்பத்திக் கொஞ்சம் தயவுசெய்து சொல்லுங்கோ” என்று நிரம்பினவியப்போடும் உருக்கத்தோடும் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/95&oldid=1582053" இலிருந்து மீள்விக்கப்பட்டது