உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

65

என்

மிகவியந்துகொண்டு அத்தகைய அரிய பண்டங்கள் தாம் தின்றதேயில்லைன்று சொன்னார்கள். கடைசியாக எல்லாரும் பருகுவதற்கு வாதுமைப் பருப்பும் பாலுஞ்சேர்த்துச் செய்த தீம்பானீயத்தை எல்லார்க்கும் வழங்கினேன். அதன்பின் அகன்ற வெள்ளித்தட்டு ஒன்றில் மெல்லிய வெற்றிலைபாக்கு இலவங்கப்பூ சாதிக்காய் சாதிப்பத்திரி முதலியவற்றை வத்து மாமனாருக்கும் அப்பாரசிக கனவானுக்கும் அவர்தம் மனைவி யார்க்குங் கொடுத்து மல்லிகைப்பூவின் அத்தரும் பன்னீருங்கலந்து மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பளிங்குக் கிண்ணங்களில் நிரப்பி அவற்றை அவர்கள் எதிரில் வைத்தேன். இறந்துபோன தங்கள் மகளே திரும்பவும் உயிர் பெற்று எழுந்து வந்து இங்ஙனமெல்லாம் உபசரிப்பதாகக்கருதி அவர்கள் அப்போது அடைந்த மனக்களிப்புக்கு ஓர் அளவே யில்லை. நெடுநேரம் யான் உபசரித்துக் கொண்டிருந்தமையால் எனக்குப் பிரயாசை மிகுதியாயிருக்கு மென்று சொல்லி, என்னை ஒரு நாற்காலியில் இருக்கும் படியும் இருந்து தின்பண்டங்கள் அருந்தும்படியும் கற்பித்தார்கள். அவர்கள் சொற்படியே ஒரு நாற்காலியில் அமர்ந்து சிறிய பிள்ளையை எடுத்து என் மடிமீது வைத்துக் கொண்டு அதற்கும் சிறிதுகொடுத்து யானும் சிறிது அருந்தினேன்.

.

6

ளை

பிறகு சிறுகுழந்தைகள் விளையாடுவதற்கு வின யாட்டுச் சாமான்கள் சிலவற்றையெடுத்து அவற்றின் கையிற் கொடுத்தேன். சிறிதுநேரம் சென்றபிறகு என் மாமனார் ணையை எடுத்து வந்து மீட்டித் தேவார திருவாசகம் பாடும்படி கட்டளையிட்டார். அப் படியே யானும் அதனையெடுத்துவந்து மடிமீது வைத்து மீட்டினேன். அப்பாரசிகப் பெருமாட்டியாரும் அவர் தம் மூத்த பெண் பிள்ளையும் என் பக்கங்களிலிருந்து கொண்டு ஒற்றைக் கையைக் கன்னத்தின்மேல் வைத்துக் கொண்டும் முழங்கையை மேசை மேல் ஊன்றிக் கொண்டும் என்னையும் வீணைமேல் என் விரல்கள் ஓடுவதையும் பார்த்த வண்ணமாய் இருந்தனர்; மற்றப் பிள்ளைகள் மூன்றும் என்னைச் சுற்றிநின்றன. என் மாமனாரும் அப்பாரசிக கனவானும் யான் பாடப்போவதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந் தார்கள். யான் வீணையின் நரம்புகளைத் தெறித்துப் பார்த்து ஓசைகூட்டி ஒழுங்குபடுத்தியவுடனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/94&oldid=1582052" இலிருந்து மீள்விக்கப்பட்டது