உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் -14

அவ்விரு குழந்தைகளையும் மடிமீது வைத்துக்கொண்டே அவ்வம்மை யாருக்குப் பக்கத்தில் ஒருநாற்காலியின்மேல் உட்கார்ந்தேன். என் மாமனார் அப்பாரசிக களவானுக்கு எதிரிலே மெல்லிதான ஒரு சாய்மான நாற்காலிமேலிருந்து கொண்டு, பல வகையான நல்லுபசார மொழிகளைச் சொல்லி அவர்களை மகிழ்வித்தார். என் மாமியாரும் நாத்தனாரும் நல்ல குணம் உள்ளவர்களாய் இல்லாமையால், அவர்களை உபசரிக்க வர வேண்டாம் என்று என் மாமனார் தடுத்துவிட்டு,யானே எல்லா உபசாரங்களும் செய்யும்படி திட்டஞ் செய்திருந்தார். மேசைமேல் வைக்கப்பட்டிருந்த குடகுநாரத்தம்பழச் சுளை களையும், கொடி முந்திரிப் பழங்களையும் அக்குழந்தைகளுக்கு யான் சிறிதுநேரம் வாயில் ஊட்டிக் கொண்டிருந்து, பிறகு இலட்டுகங்களை எடுத்து அவற்றின் கையிற்கொடுத்து அவைகளை நாற்காலிகளின்மேல் இருக்கவைத்து எழுந்தேன். அவைகள் அப்பண்டங்களைத் தின்று கொண்டே என்னைப் பார்த்துப் பாத்து பார்த்துப் பெருமகிழ்ச்சி யோடும் புன்னகை செய்து கொண்டிருந்தன. பின்னர் நெய்யிற் பாகப்படுத்தின பன்னீர் ஜிலேபிகளையும் வாதுமை அலுவாவையும் அன்ன தாழம்பழத்தில் அரிந்த துண்டுகளையும் வெள்ளித் தட்டுகளில் வைத்து மூத்தப்பெண்ணுக்கும் பெரிய பையனுக்குங் கொடுத்து விட்டு, ரோசாப் பூவின் சத்தினாற் செய்யப்பட்ட தீம்பானகத்தைப் பளிங்குத் தமிளர் இரண்டில் நிரப்பி அவற்றை அக்கனவானுக்கும் அவ்வம்மையாருக்கும் பருகக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் மகிழ்ந்தேற்றுக்கொண்டு என்னையும் மாமனாரையும் அங்ஙனமே அருந்தும்படி வேண்டினார்கள். மாமனார் அவ்வாறே செய்யும் படி எனக்குக் குறிப்பித்தமையால், வேறிரண்டு தமிளரில் அப்பானகத்தை நிறைத்து என் மாமனாருக்கு ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை யான் அருந்தினேன். அதன் பின்னர்க் கனிவான சீமை இலந்தைப் பழங்களை அறுத்தும், செவ்வாழைக் கனிகளை உரித்தும் அவற்றைப் படிகத்தட்டுகளில் இட்டு அவர்களுக்கும் என் மாமனருக்கும் வைத்தேன். அவற்றை யடுத்து உழுத்தம் பருப்புவடை முந்திரிப்பருப்புச் சேர்த்துச் செய்த கடலைமாப் போண்டு உருளைக்கிழங்குருண்டை முதலிய காரப் பலகாரங்கள் சிலவும், பன்னீர்ப்பூந்தி, 'சீனிப்பாற்கட்டி முதலிய இனிப்புப் பலகாரங்கள் சிலவும் கொண்டுவந்து எல்லார்க்கும் வழங்கினேன். அக்கனவானும் குழந்தைகளுங் காரப்பலகாரங்களின் சுவையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/93&oldid=1582051" இலிருந்து மீள்விக்கப்பட்டது