உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

கடிதம் -7

என்னுயிரிற் கலந்துகலந் தினிக்கின்ற என் அருமைக்

காதலரே,

ஆறு நாளுக்கு முன் யான் எழுதிய கடிதம் உங்களுக்கு வந்திருக்கலாம் என்று நம்புகின்றேன். கடற்கரையிற் சந்தித்த அன்றைக்கு மறுநாளில் பிற்பகலில் அப்பாரசிக கனவானும் அவர் மனைவியாரும் தாங்கள் சொன்னபடியே எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள். அவர்கள் வருவார்கள் என்பதை முன்னரே அறிந்திருந் தமையால், எங்கள் மாமனாரவர்கள் அவர்களை விருந்தேற்றற்கு வேண்டுவனவெல்லாம் சித்தஞ் செய்திருந்தார்கள். அப்பாரசிக கனவானும் அவர் தம் மனைவியாரும் அவர்கள் குழந்தைகள் எல்லாரும் வந்தார்கள். என் மாமனார் அக் கனவானை எதிர் கொண்டு கைகொடுத்து அழைத்து மெத்தை மேற் கொண்டு சென்று சூரியகாந்திப்பட்டினால் மிக மேன்மையாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்த (Sofa) *சார்மணைக் கட்டிலில் அவரை இருக்கச் செய்ததோடு, அதற்கு அருகாமையிற் சலவைக்கற் பதித்த வட்ட மேசையைச் சுற்றி நீலப்பட்டுத் துணியினுள் பஞ்சுவைத்துச் செய்யப் பட்ட நாற்காலிகளின்மேல் அவ்வம்மையாரையும் அவர் தம் குழந்தைகளையும் அமரும்படி செய்வித்தார். அவ்வம்மை யாரவர்கள் எங்கள் வீட்டினுள் நுழைந்தவுடனே என்னைப் பார்த்ததும் பலநாட் பிரிந்திருந்த தன் அருமைக் குழந்தையைப் பார்த்தாற்போல அவ்வளவு வேட்கையோடும் என்னைக் கட்டி அணைத்து முத்தம் இட்டார்கள். அதன் பிறகு யான் அவர்களின் மூத்த பெண்பிள்ளையை முகமலர்ந்து கைபிடித்து அழைத்த தோடு அதற்கு அடுத்த பெரியபையனை முத்தம் இட்டும் மற்ற ரு சிறிய குழந்தைகளைக் கையிற்றூக்கியெடுத்து முத்தமிட்டுக் கொண்டும் மெத்தைமேல் ஏறினேன். முன்னே சொல்லியபடி அவர்கள் எல்லாரும் இருக்கைகளின் மேல் இருந்தபிறகு யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/92&oldid=1582050" இலிருந்து மீள்விக்கப்பட்டது