உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் -14

என் நெஞ்சம் நீராய் உருகிற்று. என் செய்வேன் பாவியேன்! சென்ற ஒரு மாதகாலமாக யான் உமக்கு அனுப்புங் கடிதங்களும் உமக்குத் தவறாமல் வந்து சேர்கின்றனவோ இல்லையோ என்னும் ஐயமும் என்னைப் புண்படுத்துகின்றது. இன்னும் ஒரு வாரத்தில் உமது கடிதத்தை யான் காணும் பாக்கியம் பெறுவேன் என்று நினைக் கிறேன். இங்ஙனம் யான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிற், கடற்காற்று மிகவும் குளிர்ந்து வீசியது. உடனே என் மாமனார் 'வீட்டுக்குப் போகலாம்' என்று சொல்லவே, எழுந்து சாலையண்டைவந்து எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தோம். மற்றச் செய்திகளெல்லாம் இன்னும் இரண்டொருநாளில் எழுதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/91&oldid=1582049" இலிருந்து மீள்விக்கப்பட்டது